வீடு, நில பிரச்சனை தோஷங்களை நீக்கும் பூமிநாதர் திருக்கோயில், மண்ணச்சநல்லூர் |Temple for land problem
Вставка
- Опубліковано 20 січ 2025
- வீடு, நில பிரச்சனை தோஷங்களை நீக்கும் பூமிநாதர் திருக்கோயில், மண்ணச்சநல்லூர் |Temple for land problem
#sivan
#sivansongs
#shiva
#sivantemple
#omnamahshivaya
#omnamahshivay
#sivanstatustamil
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில், பூமி சம்பந்தமான அனைத்துவிதமான குறைபாடுகளிலிருந்தும் தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
வீடோ, மனையோ, நிலமோ பிரச்னை இல்லாமல் அமைய வீடு கட்டும் யோகம், வீட்டு எண் யோகம், வீடு, மனை, நிலம் விற்கும் யோகம், பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தோஷம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்னை, ஜன்ம சாப - பாப தோஷம், வாஸ்து தோஷம், வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம், பழைய வீடு புதுப்பிக்கும் யோகம், வீடு கண் திருஷ்டி தோஷம் ஆகிய 16-ம் முக்கியம்.
இந்த 16 விதமான தோஷங்களையும் இத்திருக்கோயில் பூமிநாத சுவாமி நீக்குவதாக மாமுனிவர் அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளன.
தோஷங்கள், பிரச்னைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நீக்கி, யோகமான வீடு, மனை, நிலம் அமைய, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரிலுள்ள அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் மண் வழிபாட்டு முறை செய்து, சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டால் பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலில் லிங்கத் திருமேனியில் பூமிநாத சுவாமி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்
பூமி, வாஸ்து சம்பந்தமான 16 விதமான தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியவராக பூமிநாத சுவாமி திகழ்கிறார். இந்த தோஷங்கள் நீங்க சில வரைமுறைகள் இத்திருக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
மண் வழிபாட்டு முறை
பத்திரதாரர்கள், ரத்த சம்பந்தம் உடையவர்கள் தாங்கள் வாங்க, விற்க விரும்பும் வீடு, நிலம், மனை உள்ள இடத்திலிருந்து வடகிழக்கு ( ஈசானிய, ஜல, சனி) மூலையிலிருந்து மூன்று கைப்பிடி அளவு மண்ணைப் புது மஞ்சள் துணியில் முடிய வேண்டும்.
அந்த மண் முடிப்பை மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு எடுத்து வந்து, ஒரு தேங்காய், 2 வாழைப்பழங்கள், 2 மாலைகள், வெற்றிலைப் பாக்கு தட்சிணையுடன் சுவாமிக்கு அர்ச்சனை செய்து, படைக்க வேண்டும். மண்ணையும் மனதையும் இறைவனிடம் ஒப்படைத்து, வேண்டுதல் நிறைவேறிட பிரார்த்தனை செய்ய வேண்டும்.
திருக்கோயில் குருக்களால் அர்ச்சனை செய்யப்பட்ட பின்னர், பிரகாரத்தை வலம் வந்து கொடுக்கப்பட்ட மண்ணைத் தல விருட்சமான வில்வ மரத்தடியில் குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு இட வேண்டும்.
இரண்டாவது முறையாக பிரகாரத்தை வலம் வந்து, தல விருட்சமான வன்னி மரத்தடியில் குலதெய்வத்தை வணங்கி, தங்கள் வேண்டுதலை மனதுக்குள் கூறி வன்னி மரத்தடியிலுள்ள மண்ணில் ஒரு கைப்பிடியை எடுத்து புது மஞ்சள் துணியில் முடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூன்றாவது முறையாக பிரகாரம் வலம் வர வேண்டும்.
முதல் முறை கோயில் பிரகாரத்தை வலம் வரும் போது பிரம்மா, இரண்டாவது முறை வலம் வரும் போது விஷ்ணு, மூன்றாவது முறை வலம் வரும்போது சிவனின் ஆசீர்வாதம் கிடைப்பதாக ஐதீகம்.
நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து, கம்பத்தடியில் வணங்கி வன்னி மரத்தடியிலிருந்து எடுத்த மண் முடிப்புடன் வீட்டுக்குச் சென்று பூஜை அறையில் வைக்க வேண்டும். இந்த மண் முடிப்பைப் புதன் அல்லது குரு ஓரையில் வீட்டின், மனையின், நிலத்தின் வடகிழக்கு மூலையில் பூமியில் போட்டு, சூடமேற்றி வழிபட வேண்டும். அந்த புது மஞ்சள் துணியில் ரூ. 5 நாணயத்தை வைத்து முடி போட்டு பூஜையறையில் வைக்க வேண்டும்.
தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறியதும், ரூ.5 நாணயம் உள்ள மஞ்சள் துணி முடிப்புடன் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து, முடிப் பையைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். குறைந்தது 3 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்குள் பூமி சம்பந்தமான தோஷங்கள் நீங்கி, தாங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது இத்திருக்கோயில் மண் வழிபாட்டு முறை செய்து பலன் பெற்றவர்களின் கூற்றாகவுள்ளது.
மண், மனை, வீடு இல்லாதவர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேற "பூமிக்கே நாதனாக விளங்குபவனே, என்னுடைய பிரார்த்தனையை மனதில் உள்ளதை மாலையாக சாத்திவிட்டேன்'' என்று கூறி, மூன்று அமாவாசை தினங்களிலோ, பிறந்த 3 கிழமைகளிலோ, மூன்று பௌர்ணமிகளிலோ, பிறந்த 3 தேதிகளிலோ வந்து வழிபட வேண்டும்.
தேங்காய், வாழைப்பழங்கள், 2 மாலைகள், வெற்றிலைப் பாக்குடன் மனதிலுள்ள ஆசையை மாலையாகத் தொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து, கோயில் பிரகாரத்தை 16 முறை வலம் வர வேண்டும். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி, அம்மனுக்கு 8 விதமான அபிஷேகங்களை செய்து, வழிபட வேண்டும். மேலும 10 பேருக்கு அன்னதானமும் செய்ய வேண்டும்.
இறைவி அறம் வளர்த்த நாயகி
கோயிலின் மகா மண்டப நுழைவுவாயிலின் வலதுபுறத்தில் தனி சன்னதியில் அறம் வளர்த்த நாயகி என்றழைக்கப்படும் தர்மசம்வர்த்தினி தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். இந்த அன்னையின் முன்பு மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மற்ற திருக்கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயில் மாறுபட்டிருப்பது தல விருட்சத்தில்தான். இக்கோயிலில் வில்வ, வன்னி மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன.
காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலில் நடை திறந்திருக்கும். நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜை விசேஷமானது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூர் அமைந்துள்ளது.
Sivaya Nama Om🙏🙏💐💐
Om Namah shivaya nama🙏🙏🙏
Naan etha kovil ku june 2 sentran sep 20 veetu pathiram potu vitan ohm namah shiviya❤
Om siva
ஓம் நமசிவாய
ஓம் சிவாய நம 🙏
Om nama sivaya..
Om siva siva potri🙏🙏🙏🙏
ஓம் லம் பிரித்வி யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Om eshwara potri🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய ஓம் பூமிநாதர் சாமி துணை
ஓம் சிவாய நம
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் நமசிவாய ஓம் நிலம் அமையவேண்டும் கோயில் க்கு தானம் கொடுக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் பூமி நாதன் கடவுள் அருள் புரிய வேண்டும்
ஓம் ஶ்ரீ பூமிநாதர் ஓம் ஶ்ரீ தர்மவர்சினி அம்மன் , ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
பூமிநாதர் திருவடிகளே சரணம்!சரணம்!!
Super 👍
ஓம் நமச்சிவாய நமஹ
Om NamaSivaja Om.Om Sakthi Om.
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
Om nama sivaya nama anaitthu Bhoomi prachanai thiranum🙏🙏🙏
🙏🏻
Om boomi natha swamy nan chengamla veedu kattanumpa pls
🙏🌸🌹சிவ சிவ🌻🙏🔱🌸🔱
🙏🏻🙏🏻🙏🏻
அப்பா மண்ணெடுத்து நல்லூர் சிவபெருமானே நான் எல்லா கோவிலுக்கும் போயிட்டு வந்துட்டேன் சிவபெருமானே என்னுடைய இடம் ஒன்னு என்னுடைய இடத்தை வித்து குடியை வா கடவுளே பகவானே எத்தனையோ கோவிலுக்கு போயிட்டு வந்துட்டேன் எனக்கு எந்த பிரார்த்தனையும் நிறைவேற மாட்டேங்குது இறை யூடியூப் மூலியமா பார்த்தேன் நான் இப்போ உங்ககிட்ட என்னோட வேண்டுதல் வைக்கிறேன் பரமேஸ்வரா என்னுடைய இடம் சீக்கிரமா வித்து கொடு சிவபெருமானே எனக்கு மயிலாடுதுறை மாவட்டம் சிவபெருமானே சிக்கனத்தை திரும்பவும் பரமேஸ்வரா என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
ஐயா மண் அணைச்ச நல்லூர் சிவனே போற்றி என்னுடைய நிலைப்பிரச்சனையை வீட்டு பிரச்சனையை நல்ல மாதிரியா முடிச்சு குடுங்க ஐயா எல்லாம் வல்ல இறைவா போற்றி ஓம் சிவனே போற்றி போற்றி
🙏🙏🙏
It's true yelarum intha Kovil ponga nalathey nadakkuthu...sathyamana unmai
🙏
ஏனுங்க உங்களுக்கு என்ன நடந்தது எனக்கு பூமியில் பிரச்சினை வாஸ்து தோஷம் பிறந்த வீடு நிலம் புகுந்த வீடு நிலம் நானும் போக வேண்டும் நன்றி
Enkal veedu apartmentla irukirathu. Neenkal sonathu pol mannai veetai kooti eduthu vanthom. Athe pol thirumpa vanthu athe idaththil soodam vaithu poojai seithom. Antha elumichai palaththai ankaye vaikka mudiyathula athai thirumpa edukalaama. Epothu edukalam ayya. Thayavu seivu reply ayya.
Ena ena thaniyangal konadu varanum
Manne illadhavanga enna pannanum nu sollunga plsss
Yella nalum pogalama .vedu pirachahiku . reply
Yes. 🙏
Prapancham Nandini
Yenna paruppu kudukanum
எந்த கிழமைகளில் வந்தால்
புமிநாதர்கோவிலுக்குவந்துமன்வைத்துபுஜைசெய்துகொண்டுவந்துவீட்டுமனையில்கட்டினேன்வீடுசிட்டுவீடுகட்டிபால்காய்ச்சவில்லைகடன்வாங்கியிருக்கிரேன்ஆனால்இப்பொஅந்தவீட்டைரோடுபோடுவதற்குகேட்கறர்கள்எனோடுவீடுஎனக்குமிட்டுகொடுபுமிநாதர்அருள்கிடைக்கனும்
சுவாமி உங்கள் போன் நம்பர் கிடைக்குமா.
Sivami name phone. Number kidiguma
நிலத்துக்கு பணம் கட்டி பத்திரம் பொடும் தருவாயில் விற்பனை செய்தவருக்கு ஸ்டே ஆர்டர் வந்து பதிவு செய்ய முடியாமல் போய் விட்டது 7 வருடம் ஆகிறது. என் தந்தை பெயரில் அந்த இடம் பதிவாக இந்த பரிகாரம் செய்யலாமா?
பரிகாரம் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை . இந்த கோவிலுக்கு சென்று சிவனை வழிபாடு செய்துவிட்டு வாருங்கள் . நல்லது நடக்கும். சிவனருள் நிச்சயம் கிடைக்கும் . ஓம் நம சிவாய ..🙏
@eesanethunai நன்றி
Amount evlo pay pannanum please reply
Plz visit the temple directly and do Archanai....
அர்ச்சனை தேங்காய் பழம் மாலை நம் இடத்தில் இருந்து எடுத்துச்செல்லும் மண் மட்டுமே தட்டு காணிக்கை உங்கள் விருப்பம் ஆனால் கண்டிப்பாக நல்லது நடக்கும் உண்மை என் அனுபவத்தில் சொல்கிறேன்
500 😂
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நான்புமிநாதர்கோவிலுக்குஒருமாதத்திற்குள்சேக்கிளாமுற்றுதல்நடந்தேஅன்றுநன்அங்குதன்இருந்தேன்என்வீட்டுமனைபிரச்சனைஎன்றுசெல்லியிரூந்தேன்இப்போதுசிரிதுஅளவுகுறைநந்துள்ளாதுஇனிமேல்வீட்டுபிரச்சனைவாறமல்புமிநாதர்எனக்குமகிழ்ச்சியைகொடுக்கனும்நன்மனம்வேதனையில்இருந்தேன்பூமிநாதர்யூடிபில்கொடுத்தற்குநன்றி
🙏🏻
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏