முடச்சிக்காடு மாணவிக்கு நேர்ந்த சோகம்
Вставка
- Опубліковано 31 гру 2024
- யாழினி,
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி...
முடச்சிக்காடு கிராமத்தில் பிறருக்குச் சொந்தமான ஒரு தோப்பில் தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசைக்குள் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருபவர்...
பெற்றோரை இழந்து தவிக்கும் இவருக்கு ஒரே ஆறுதல் பாட்டி! பிள்ளைகளை இழந்து தவிக்கும் பாட்டிக்கு ஒரே ஆறுதல் பேத்தியான யாழினி மட்டுமே!
மின் வசதி இல்லாத இவர்களின் குடிசை வீடு சில நாட்களுக்கு முன் தீக்கிரையானது...
வீட்டிலிருந்த துணிகள் கயிற்றுக் கட்டில் பண்டம் பாத்திரம் அத்தனையும் தீக்கரையானது...
இவள் படித்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் குறிப்பேடுகள் அத்தனையும் கருகிப்போனது...
ஆதரவற்ற நிலையில் தவிக்கும் இவர்களுக்கு ஆறுதலாய் இருப்பது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே...
சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் நேரில் வந்து ஆறுதல் சொல்லி அடிப்படைத் தேவைகளுக்கு வழி அமைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அருகில் உள்ள சமத்துவபுரத்தில் அடுத்தவருக்கு ஒதுக்கப்பட்ட ஒரு வீட்டில் தற்காலிகமாக தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள்...
எதுவும் நிரந்தரமில்லை! என்ற நிலையில் அடுத்த வேளை உடுத்திக் கொள்ள கூட உடை இழந்த நிலையில்... உணவு தயாரித்துச் சாப்பிட வாய்ப்பிழந்த நிலையில்... அயராது படிக்கிறாள்! அரையாண்டு தேர்வு எழுத தனது அரசுப் பள்ளிக்குச் சென்று வருகிறாள்!
குழந்தை வயதில் தாயை இழந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு நோயில் படுத்த தனது தந்தையையும் இழந்து. பாட்டியின் அரவணைப்பில் வாழும் இவள் தனது இருப்பிடத்தையும் இழந்து நிற்கதியாய் நிற்கிறாள்!
இழப்பு....
இழப்பு...
பேரிழப்பு...
வாழ்வில் இழப்பைத் தவிர வேறொன்றும் அறியாமல், அடிப்படைத் தேவைகள் அனைத்திற்கும் அள்ளாடி வருகிறாள்..
பேசும்பொழுதே கண்களில் கோர்த்துக்கொள்ளும் கண்ணீரை துடைத்தபடியே பேசும் தனது பாட்டியை தேற்றுகிறாள்!
வறுமையோ, இழப்போ யாழினியின் உறுதியை அசைக்கவில்லை. இவளின் இலக்கு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, செவிலியர் படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதுதான்...
அரசு இவளின் இன்றைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும்! இவர்கள் வசித்துக் கொள்ள நிரந்தரக் குடியிருப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். இவளின் உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
எளியவர்கள் வீட்டுப் பிள்ளைகள் ஏற்றம் பெறும் பொழுது, பெரும் மாற்றம் சமூகத்தில் நிகழும்!
அன்புமிக்க வாசகர்களே! அனைத்தையும் இழந்து நிற்கும் யாழினிக்கு அரணாய் நில்லுங்கள்!