3.10 - Part-1 - அலைவளர் தண்மதி - alaivaLar thaNmadhi - Thevaram class (தமிழ்)

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Part-1: • 3.10 - Part-1 - அலைவள...
    Part-2: • 3.10 - Part-2 - அலைவள...
    சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.10 - அலைவளர் தண்மதி - (திருவிராமேச்சுரம்)
    sambandar tēvāram - padigam 3.10 - alai vaḷar-taṇ-madi - (tiruvirāmēccuram)
    Odhuvar - Dharmapuram Swaminathan - தர்மபுரம் சுவாமிநாதன்: • Alavalar Thanmadhi |தி...
    பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses.
    இப்பதிகப் பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
    Blog post link: thevaramclass....
    Verses of this padhigam are available (in several languages) in the above URL.
    V. Subramanian
    #thevaram #sambandar #தேவாரம் #சம்பந்தர் #Ramayanam #ராமாயணம் #Rameswaram #ராமேஸ்வரம்
    ====
    Padhigam background - Periya Puranam
    Word separated version:
    Sambandar worshiped in Tirunelveli and went to Rameswaram
    2785 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 887
    புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்,
    .. புரி-சடையார் திருப்-பதிகள் பிறவும் சென்று
    நண்ணி, இனிது-அமர்ந்து அங்கு நயந்து பாடி,
    .. நல்-தொண்டருடன் நாளும் போற்றிச் செல்வார்,
    விண்ணவரைச் செற்று-உகந்தான் இலங்கை செற்ற
    .. மிக்க பெரும் பாதகத்தை நீக்கவேண்டித்,
    திண்ணிய பொற்சிலைத்-தடக்-கை இராமன் செய்த
    .. திரு-இராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்.
    Sambandar worshiped Siva at Rameswaram and sang padhigam
    2786 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 888
    செங்கண்-மால் வழிபட்ட கோயில் நண்ணித்,
    .. திருமுன்பு தாழ்ந்து-எழுந்து, தென்னனோடும்
    மங்கையர்க்கு நாயகியார்தாமு(ம்) மெய்ம்மை
    .. மந்திரியாரும் சூழ, மணி-நீள்-வாயில்
    பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப்,
    .. புடை-வலங்கொண்டு உள் அணைவார், போற்றிசெய்து
    பங்கயச்-செங்கை குவித்துப் பணிந்து நின்று
    .. பாடினார், மன்னவனும் பரவி ஏத்த.
    2787 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 889
    சேதுவின்கண் செங்கண்-மால் பூசை செய்த
    .. சிவபெருமான்-தனைப் பாடிப் பணிந்து போந்து,
    காதலுடன் அந்நகரில் இனிது மேவிக்,
    .. கண்ணுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு-எல்லாம்
    கோது-இல் புகழ்ப் பாண்டி-மாதேவியார் மெய்க்-
    .. குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல,
    நாதர்தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி,
    .. நளிர்-வேலைக்-கரையில் நயந்து இருந்தார்-அன்றே.
    சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.10 - திருவிராமேச்சுரம் - (பண் - காந்தார பஞ்சமம்)
    (தானன தானன தானன தானன தானன - Rhythm)
    (தானன தானன தான தான தனதானன - Rhythm - another view)
    பாடல் எண் : 1
    அலை வளர்-தண்-மதியோடு அயலே அடக்கி, உமை
    முலை வளர் பாக(ம்) முயங்க-வல்ல முதல்வன், முனி;
    இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்
    தலை வளர் கோல-நன்-மாலையன் தான் இருந்து ஆட்சியே.
    பாடல் எண் : 2
    தேவியை வவ்விய தென்-இலங்கைத் தசமாமுகன்
    பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போயற
    ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
    மேவிய சிந்தையினார்கள்தம் மேல்வினை வீடுமே.
    ========
    Word separated version:
    ( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
    Sambandar worshiped in Tirunelveli and went to Rameswaram
    2785 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 887
    puṇṇiyanār nelvēli paṇindu pōṭrip,
    .. puri-saḍaiyār tirup-padigaḷ piṟavum seṇḍru
    naṇṇi, inidu-amarndu aṅgu nayandu pāḍi,
    .. nal-toṇḍaruḍan nāḷum pōṭric celvār,
    viṇṇavaraic ceṭru-ugandān ilaṅgai seṭra
    .. mikka perum pādagattai nīkkavēṇḍit,
    tiṇṇiya poṟcilait-taḍak-kai irāman seyda
    .. tiru-irāmēccurattaic ceṇḍru sērndār.
    Sambandar worshiped Siva at Rameswaram and sang padhigam
    2786 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 888
    seṅgaṇ-māl vaḻibaṭṭa kōyil naṇṇit,
    .. tirumunbu tāḻndu-eḻundu, tennanōḍum
    maṅgaiyarkku nāyagiyārdāmu(m) meymmai
    .. mandiriyārum sūḻa, maṇi-nīḷ-vāyil
    poṅgi eḻum viruppināl uḍanē pukkup,
    .. puḍai-valaṅgoṇḍu uḷ aṇaivār, pōṭriseydu
    paṅgayac-ceṅgai kuvittup paṇindu niṇḍru
    .. pāḍinār, mannavanum paravi ētta.
    2787 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 889
    sēduvingaṇ seṅgaṇ-māl pūsai seyda
    .. sivaberumān-tanaip pāḍip paṇindu pōndu,
    kādaluḍan annagaril inidu mēvik,
    .. kaṇṇudalān tiruttoṇḍar ānārkku-ellām
    kōdu-il pugaḻp pāṇḍi-mādēviyār meyk-
    .. kulacciṟaiyār kuṟaivaṟuttup pōṭric cella,
    nādardamai nāḷdōṟum vaṇaṅgi ētti,
    .. naḷir-vēlaik-karaiyil nayandu irundār-aṇḍrē.
    sambandar tēvāram - padigam 3.10 - tiruvirāmēccuram - (paṇ - kāndāra pañjamam)
    (tānana tānana tānana tānana tānana - Rhythm)
    (tānana tānana tāna tāna tanatānana - Rhythm - another view)
    pāḍal eṇ : 1
    alai vaḷar-taṇ-madiyōḍu ayalē aḍakki, umai
    mulai vaḷar pāga(m) muyaṅga-valla mudalvan, muni;
    ilai vaḷar tāḻaigaḷ vimmu kānal irāmēccuram
    talai vaḷar kōla-nan-mālaiyan tān irundu āṭciyē.
    pāḍal eṇ : 2
    dēviyai vavviya ten-ilaṅgait tasamāmugan
    pū iyalum muḍi poṇḍruvitta paḻi pōyaṟa
    ē iyalum silai aṇṇal seyda irāmēccuram
    mēviya sindaiyinārgaḷdam mēlvinai vīḍumē.
    ========

КОМЕНТАРІ • 4

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 7 місяців тому

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 місяців тому

    சிவாய நம🔱🙏🌸🌸🌸🌹

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 6 місяців тому

    அருமை
    சிவாய நம

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 7 місяців тому

    C.K. சுப்பிரமணிய முதலியாரின் கருத்து நயம் நன்றாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் சிந்திக்கிறார்கள். ஆனால் என் போன்றவர்களுக்கு தங்களைப் போன்றவர்கள் விளக்கி சொன்னால் மட்டுமே புரிகிறது.