போதை அழிவின் பாதை - விழிப்புணர்வு பாடல் live

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • பாடல் வரிகள்:
    பல்லவி:
    ஏ போதையிலே கால்கள் தடுமாறுதே - புத்தி
    பேதலிச்சி வாழ்க்கை தடம் மாறுதே- அப்பா
    எப்போ மாற போற- அப்பா
    எப்போ மாற போற
    மத்தவங்க மதிக்க- நீ
    வாழ்ந்து காட்ட போற
    சாவு வரும் முன்பே
    நோவு வரும் - பாரு
    ஈரல் கெட்டு போனா- நீ
    வேஸ்ட் ஆன ஆளு- அப்பா
    எப்போ மாற போற- அப்பா
    எப்போ மாற போற
    சாவு வரும் முன்பே- பல
    நோவு வரும் பாரு
    சரணம் 1
    புகையில பாக்கு எல்லாம்
    போடுற தேனோ
    வாயிலே புத்து வந்து செத்திடத்தானோ
    ஓழச்சி வாழ முடியாம
    கிடப்பதும் ஏனோ?
    உன் உசுரு புகையாகி
    கருகிடத் தானோ!
    குடிச்சு குடிச்சு கொடலு
    வெந்து சாகப்போகிற..
    குடும்பத்தையே நடுத்தெருவுல நிக்க வைக்கிற
    ஏ போதையிலே கால்கள் தடுமாறுதே - புத்தி
    பேதலிச்சி வாழ்க்கை தடம் மாறுதே- அப்பா
    எப்போ மாற போற- அப்பா
    எப்போ மாற போற- அப்பா
    எப்ப மாற போற
    சரணம் 2
    குடிப்பதும் புகைப்பதும்
    துக்கமா மாறும்
    அடிப்பதும் உதைப்பதுமா குடும்பமே நாறும்
    பிள்ளைக் குட்டி எல்லாமே தலைவிரிக் கோலம்
    திருந்தி நீயும் இருந்து கிட்டா காலமே மாறும்
    போதும் போதும் பொல்லாத போதை பழக்கம்
    அம்மாவின் சொல் கேளு வாழ்க்கை இனிக்கும்- ஏ போதையிலே கால்கள்
    தடுமாறுதே - புத்தி
    பேதலிச்சி வாழ்க்கை தடம் மாறுதே- அப்பா
    எப்போ மாற போற- அப்பா
    எப்போ மாற போற
    போதை எல்லாம் மறந்து- நீ வாழ்ந்து காட்ட போற- அட
    எத்தன பேர் சொன்ன பாடம் இது அத மறக்காம நடந்துக்கிட்ட
    துன்பமே ஏது...
    ஏ போதையிலே கால்கள் தடுமாறுதே - புத்தி
    பேதலிச்சி வாழ்க்கை தடம் மாறுதே- அப்பா
    எப்போ மாற போற- அப்பா
    எப்போ மாற போற
    போதை எல்லாம் மறந்து- நீ வாழ்ந்து காட்ட போற....
    விழிப்புணர்வு பாடல்கள்
    போதை அழிவின் பாதை
    தமிழ் விழிப்புணர்வு பாடல்கள்
    சமுதாய சீர்திருத்த பாடல்கள்

КОМЕНТАРІ • 47