crime story full story/Tamil audiobooks/ online /suspense /new novel/கட்டுவிரியன்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • "கட்டுவிரியன்" எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புத்தம் புதிய க்ரைம் நாவல்.
    ராமநாதன் தன் கண்ணில் படும் தனக்கு பிடித்த பெண்களை அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் வன்புணர்வு செய்யும் அயோக்யன். கட்டுவிரியன் பாம்பைப் போன்ற கொடிய ராமநாதனின் கண்களில் படுகிறாள் அவன் மகன் சிவா காதலிக்கும் ரேவதி. ராமநாதன் ரேவதிக்கு குறிவைக்க அடுத்து என்ன? பரபரப்பான கட்டுவிரியன் நாவல் விடை சொல்லும்.
    நாவலிலிருந்து
    ராமநாதன் உள்ளே நுழைய எதிரில் வந்த முனியன் கும்பிட்டான்.
    "என்ன முனியா பண்ணி இருக்க?"
    "நாட்டுக்கோழி வறுவல் அய்யா"
    "ரொம்ப நல்லது நம்ம நாட்டுக்கோழி உள்ள வந்திருக்கா?"
    "ஆமாங்க பாவமா இருக்கு . வந்ததுல இருந்து அழுதுட்டிருக்கு " சொன்ன முனியனை புன்னகையுடன் ஏறிட்ட ராமநாதன் சொன்னார்.
    "அதெல்லாம் பார்த்தா வேலை நடக்காது முனியா"
    முனியன் ஒன்றும் பேசவில்லை. ராமநாதனின் அனைத்து விஷயங்களையும் அறிந்தவன் அவன் தான். ஆனால் வெளியே மூச்சுக்கூட காட்ட மாட்டான். அவனுக்கு தெரியும் மூச்சு காட்டினால் மூச்சு நின்றுவிடும் என்று.
    அறைக்குள் நுழைந்த ராமநாதனைப் பார்த்து அமர்ந்திருந்த செல்வி பயத்துடன் எழுந்து நின்றாள். கண்களில் கண்ணீர் கோடாய் இருக்க ராமநாதன் புன்னகைத்தார்.
    "காவிரியில தண்ணியிருக்கோ இல்லையோ உன் கண்ணுல தண்ணி ஜாஸ்தியா இருக்கு"
    "அய்யா"
    "ம்"
    "என்னை விட்டுடுங்கய்யா. எனக்கு பயமாயிருக்கு"
    "எல்லாரும் சொல்றதத்தான் நீயும் சொல்ற. முதல் முறை அப்படித்தான் பயமா இருக்கும். என்ன நடக்குமோன்னு ஒரு டென்ஷனா இருக்கும். அதுக்கப்புறம் நீயே வந்து அடுத்து எப்பன்னு கேப்பே நம்ம பர்ஃபாமென்ஸ் அப்படி. " சொன்னபடி அவளை நெருங்க அவள் சட்டென்று அவர் காலில் விழுந்தாள். கதறினாள்.
    "அய்யா வேண்டாங்கய்யா"
    அவள் முதுகு வியர்த்திருக்க அவளைத் தூக்கினார். அவள் அவஸ்தையாய் பார்க்க
    "கண்ணு கால்ல மத்த சமயத்துல விழுந்தா ஆசீர்வாதம் பண்றேன். இப்ப வேற வழி இல்ல கண்ணு" சொன்னவர் பார்வை அவள் உடம்பில் ஊடுருவ அவன் கூசினாள்.
    "சரி சரி பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாம சட்டுபுட்டுன்னு ட்ரஸ்ஸக் கழட்டு" அவர் சொல்ல திக்கென்று அதிர்ந்தாள்.
    "என்ன கண்ணு நான் சொன்னது புரியலையா? மளார்னு டிரஸ்ஸ அவுத்துட்டு இப்படி வந்து படு. வேலைய முடிச்சுட்டு வெளியில போவோம். முனியன் நாட்டுக்கோழி பண்ணிருக்கான். செம்மயா இருக்கும். ரெண்டு பேரும் சாப்பிட்டு எதுவும் நடக்காத மாதிரி நீ உன் வீட்டுக்குப் போயிரு. நான் என் வீட்டுக்குப் போயிடறேன். சரியா?"
    ராமநாதன் சொல்ல செல்வி கண்களில் நீர் வழிய அவரைப் பார்த்தாள். அவர் முகம் மாறியது.
    "நீ வேலைக்கு ஆகமாட்டே. கோழியே கோழியே இறகு போடுன்னா கோழி இறகு போடாது. நாமதான் புடுங்கணும். " சொன்ன ராமனாதன் அவளைக் கட்டிலில் தள்ளினார்.
    கட்டுவிரியன் அமேசானில் படிக்க
    www.amazon.in/...
    www.amazon.com...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    அமிர்தா (வாசித்தவர்)
    #crime
    #crimestory
    #tamilaudiobooks
    #tamilvoiceover
    #tamilaudiostories
    #familystory
    #lovestory
    #familynovels
    #novels
    #thrillernovel
    #voiceovertamil
    #gktamilnovels
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #tamilcrimestories
    #tamilcrimenovels
    #gavudhamstories

КОМЕНТАРІ • 34

  • @m.kumarmuthukaruppan333
    @m.kumarmuthukaruppan333 2 місяці тому +3

    கதை சூப்பர்

    • @gktamilnovels
      @gktamilnovels  2 місяці тому +1

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @roseroja2201
    @roseroja2201 3 місяці тому +2

    நல்ல வித்தியாசமான கதை
    நேரம் போறதே தெரியல
    அருமையான முடிவு
    சகோதரி அமிர்தா குரல் எப்பவும் போலவே அல்டிமேட்

    • @gktamilnovels
      @gktamilnovels  3 місяці тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 Рік тому +8

    கற்பழிப்பை இவ்வளவு விரிவாக எழுத வேண்டுமா? சூசகமாக சொன்னால் போதாதா?

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      ராமனாதன் கதாபாத்திரத்தின் தன்மைக்காக அப்படி எழுதப்பட்டது. அதான். 🙏😊

  • @annamannam4641
    @annamannam4641 Рік тому +6

    நல்ல அருமையான ஸ்கிரிப்ட், கதையை ஒரு திரைப்படம் போல் அமைக்க நினைத்து, வில்லனின் காட்சிகளில் விரசம் சற்று அதிகம் தான், ஆனாலும் வில்லனின் குணாதிசயத்தை விவரிக்க அது தேவைபடுவதால் தவிர்க்க முடியவில்லை ok, இருந்தாலும் கதையின் முடிவில் நான் சற்று ஏமாந்துதான் போனேன்,முனியன் வில்லணை காலில் விழுந்து கேட்டு, சிவாவை கொல்ல வேண்டாம் என கெஞ்சி பின் முடியாமல், வேறு வழியின்றி தன் முதலாளியை கொல்ல அறிவாளை எடுத்து ஓங்கும் நேரம், எங்கிருந்தோ ஒரு கட்டு விரியன் வந்து வில்லணை கடித்து இருந்தால், முனியனின் பாசமும் விளங்கி, அவனும் சிவாவோடு சந்தோசமா, விசுவாசாமா இருக்கற மாறி முடித்திருந்தால், சரியாக இருந்திருக்கும், என்னை பொறுத்தவரை நல்லவர்கள் கற்பனை, கதைகளிலாவது வாழ்விக்க விருப்பம் GK Sir, கெட்டவர்களை, நல்லவர்கள் கொன்று அவர்களும் சாவதை விட,இயற்கை அல்லது கடவுள் தண்டித்தது போல் முடித்திருந்தால், இன்னும் சிறப்பாககவும், தலைப்பிற்கு பொருத்தமாகவும், இன்னும் உங்களுக்கு நிறைய Fans சை பெற்று தருவதற்கு வாகாகவும் அமையும், நீண்ட என் கருத்தை பிழையாக எண்ண வேண்டாம், இன்னும் சிறந்த படைப்புகளை நீங்கள் நிறைய படைக்க வேண்டியும், நிறைய பரிசுகள், பாராட்டுகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கூரியுள்ளேன், தவறானால் மன்னிக்கவும் GK Sir 🙏🏼

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому +4

      மிக்க நன்றி மேடம். நீங்கள் சொன்ன கிளைமாக்ஸ் மிகவும் நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள்👌👌👏👏
      அந்த யோசனை இருந்தது இருந்தாலும் அப்படி வைத்தால் சினிமாத்தனமாக இருந்து விடுமோ என்ற தயக்கம் 😃😃 அப்படி ஒரு முடிவை வைக்கவில்லை. இருந்தாலும் வைத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்பது உங்களின் விரிவான சிறந்த பின்னூட்டத்தில் அறிகிறேன். அடுத்த கதை எழுதும்போது இதையும் கவனத்தில் கொள்கிறேன். தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🙏
      கவுதம் கருணாநிதி

    • @annamannam4641
      @annamannam4641 Рік тому +3

      @@gktamilnovels ரொம்ப நன்றி GK Sir, ஏன்னா நிஜ வாழ்வில் இருக்கும் கெட்டவர்கள், தன்னை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற தைரியத்தில் இருப்பார்கள், அவர்களையும் கடவுள் அல்லது இயற்கை தண்டிக்கும் என்ற எண்ணம் சற்று பயமுறுத்தும், நிஜத்தில் நல்லவர்க்கு உதவ யாருமில்லை என்றாலும், இது போன்ற கதைகளில், நல்லவர்கள் சாவதையோ, தண்டிக்க படுவதையோ மக்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை, அண்ணா துரை பட தோல்விக்கு இது தான் காரணம், புதிய பாதை பட வெற்றிக்கும் அது தான் காரணம்,Thanks sir🙏🏼🥰

  • @mariyappansm6752
    @mariyappansm6752 Рік тому +2

    சகோதரி குரல் வளம் அருமை
    கதை சூப்பர்

  • @kosalairajan5470
    @kosalairajan5470 Рік тому +3

    அருமையான கதை வாழ்க வளமுடன்

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb Рік тому +2

    வணக்கம் 🙏சகோதரி 👃 அககா நாவலில் வரும் வசனங்கள் கதை க்கு ஏற்றபோல.. ராம நாதனைஇன்னும் சில மனிதர்கர்.தனக்கு என் வாழ்பவர்கள் சுயநலமாக அனைத்திலும்.. கடைசியில் விசுவாசத்தின் நியாயம் (முனியன்) வெற்றி பெற்றது ..பாசம் என்றுமே தோற்று விடும்போது கதையில் பரிந்தது போல எழுத்துகளை எழுதி குரலிலும் நடவடிக்கைகள்யிலும் நன்றி 🙏

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      நன்றி தங்கை மிக்க மகிழ்ச்சி. உங்களின் விமர்சனங்கள் எனக்கும் என் டீம் மெம்பர்ஸ் அனைவருக்கும் நல்லதொரு ஊக்கமாக அமைகிறது. 🙏😊
      கவுதம் கருணாநிதி

  • @nivasmanjula709
    @nivasmanjula709 Рік тому +1

    Super story and climax

  • @logapamathas3
    @logapamathas3 Рік тому +1

    நாவல் சுப்பர் உங்கள் குரல் இனிமை 😘😘😘

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊

  • @stellafrancis1867
    @stellafrancis1867 5 місяців тому +1

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 Рік тому +1

    Voice super thanks sis / bro

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 Рік тому +1

    👌👌👌👌👌

  • @MurthyRaghavan
    @MurthyRaghavan Рік тому +2

    It will be great if you could have avoided the bed room scene explaining in detailed

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      Thank you so much 🙏😊 Will follow in next story

  • @madhumaya8073
    @madhumaya8073 Рік тому +3

    Villain character ah describe panna ivlo mosama ..cha ketkave mudiyala.sir Eni ithu pola eluthatheenga.its damaged ur image.ponga sir.

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому +1

      Oknga...intha novel than ippadi irukkum..inime gavanama irukken..thanks for your valuable feedback 🙏
      GK

    • @flowerflower3034
      @flowerflower3034 7 місяців тому

      Correct sis

  • @Vistra.
    @Vistra. Рік тому

    Ajana babu meaning enna sister?🤔

  • @Life_Lover_143
    @Life_Lover_143 9 місяців тому +1

    Siva char worst