மாலை 5.00 மணி DD தமிழ் செய்திகள் [12.07.2024]

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • 1) எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா ஒத்துழைப்பை நல்கும் - பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி உறுதி
    2) தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.
    3) வானிலிருந்து தரையிலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ருத்ரா எம் 2 ஏவுகணை - வெற்றிகரமாக சோதித்தது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு டி ஆர் டி ஓ.
    4) முதலமைச்சர் மு க ஸ்டாலினுடன் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி செய்வதாக புகார்.
    5) தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
    6) விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் - நாளை வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடுகள்.
    7) மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் - கள்ளச்சாராயத்தை தயாரித்து, விற்பனை செய்வோருக்கு ஆயுள் தண்டனை
    8) பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் - 2 மாதத்திற்குள் பாலம் செயல்பாட்டிற்கு வரும் என தகவல்
    9) நேபாள நிலச்சரிவில் சிக்கிய இரண்டு பேருந்துகள் - 65 பேரை காணவில்லை - மீட்புப் பணிகள் தீவிரம்.
    10) விம்பிள்டன் டென்னிஸ் - முதலாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் ஆல்காராஸை எதிர்கொள்கிறார் டேனியல் மெத்வதேவ் - மற்றொரு அரையிறுதியில் நோவாக் ஜோகோவிச் - லோரென்ஸோ மியூஸெட்டி மோதல்.

КОМЕНТАРІ •