Це відео не доступне.
Перепрошуємо.

ஒரே ராசி ஒரே லக்னம் - ஜென்ம ராசியே ஜென்ம லக்னமாக ஒருவருக்கு அமைந்தால் அதனால் உண்டாகக்கூடிய பலன்கள்..

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • ஒரே ராசி ஒரே லக்னமே ஒருவருக்கு அமைந்தால் அதனால் உண்டாகக்கூடிய பொதுவான பலன்கள்..., ஒருவருடைய ஜென்ம ராசியே அவருக்கு ஜென்ம லக்னமாக அமைவதால் வரும் பலன்கள்... - • ஒரே ராசி ஒரே லக்னம் - ...
    அரிதான ஒரு சேர்க்கை (combination) அதே நேரத்தில் மிக அரிதான ஒரு சேர்க்கை (combination) என்றும் சொல்லிவிட முடியாது அடிக்கடி நிகழக்கூடிய வாய்ப்புள்ள சேர்க்கைதான் (combination) அதாவது ஒருவருக்கு எது சொந்த ராசியாக இருக்கின்றதோ அந்த ராசியே அவருக்கு லக்னமாகவும் அமைவது, வேறு வழியில் சொல்வதென்றால் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் எந்த ராசியில் அமைக்கின்றாரோ அதே ராசியில் லக்னமும் எழுதப்பட்டிருக்கும் உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் தனுசு ராசியில் எழுதப்பட்டிருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதே தனுசு ராசியில் லக்னம் எழுதப்பட்டிருந்தென்றால் அவருடைய ஜென்ம ராசி தனுசு ஜென்ம லக்னமும் தனுசு லக்னம் என்று அர்த்தம், மற்றொரு ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மிதுன ராசியில் எழுதப்பட்டிருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதே மிதுன ராசியில் லக்னம் எழுதப்பட்டிருந்தென்றால் அவருடைய ஜென்ம ராசி மிதுன ஜென்ம லக்னமும் மிதுன லக்னம் என்று அர்த்தம் அவர் ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று சொல்லலாம் இப்படி ஒருவருடைய ராசியும் லக்னமும் ஒன்றாக இருந்தால் அதனால் உண்டாகும் பொதுவான பலன்களை தான் இந்த பதிவில் நாம் தொடர்ந்து பார்க்க உள்ளோம்.
    இதற்கான பலன்களை பார்ப்பதற்கு முன் ஜனன லக்னம் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம் சூரியனின் ஜீவகாந்த உயிர் ஒளி வீச்சு தான் லக்னமாகும் சுருக்கமாக உயிர் ஒளிப்புள்ளி என்று சொல்லலாம், சந்திர கிரகம் நகரும் நட்சத்திர புள்ளிகள் தான் உடல் இருப்பு மன இருப்பு ஆகும் இதனை தான் நாம் ஜென்ம ராசி என்று சொல்கின்றோம், என்னுடைய ஜோதிட ஆசானாக இருக்கக்கூடிய கோள்முனியார் இந்த ஜென்ம லக்னம் மற்றும் ஜென்ம ராசியை பற்றி கூறும்போது "ஒளிக்கு அதன் வீச்சை பார்ப்போம் உடலுக்கு அதன் இருப்பை பார்ப்போம்" என்றும் மேலும் "விதியின் மீது மனம்" என்றும் கூறுவார். ஆக ஜென்ம லக்னம் ஒருவருடைய விதியின் இயக்க அமைப்பை காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம் அதேபோல ஜென்ம ராசி என்பது ஒருவருடைய மன இயக்க அமைவை காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம் ஆக இந்த இரண்டும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் போது அந்த ராசியின் பண்புகளை சேர்த்து பலன்களைத் தருவார்கள்.....

КОМЕНТАРІ • 3

  • @JagadeesRaja
    @JagadeesRaja 2 місяці тому +1

    மகரம் ராசி மகரம் லக்கினம்

  • @aarthysankari2451
    @aarthysankari2451 29 днів тому

    Yennoda babies rendu perukum ora rasi ora laknam

  • @jagan2063
    @jagan2063 Рік тому

    Ayya yennaku ora rasi ora langanum