பிற்பகல் 1.00 மணி DD தமிழ் செய்திகள் [22.12.2024]

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025
  • 1) உலகின் திறன் தலைநகராக விளங்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு - குவைத்தில் பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்
    2) பாதுகாப்பு, பராமரிப்பு, தரத்தை அதிகரிக்க மும்மடங்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும் - ரயில்வே
    பணியாளர்களுக்கு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
    3) தனித்தனியே இரு விண்கலங்களை விண்வெளியில் சென்று இணையசெய்ய நடவடிக்கை - வரும் 30 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ
    4) தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வாட்டுகிறது குளிர் - ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 3 டிகிரிக்கு கீழே சென்றது
    5) பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து- பலியானோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு
    6) சென்னையில் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழுக் கூட்டம் - புயல், வெள்ள நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு இரண்டாயிரம் கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
    7) நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம் - கேரளாவுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை
    8) கல்வி விவகாரத்தில் மாணவர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழக அரசு செயல்படுகிறது -
    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
    9) உலக நாடுகளில் களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை - அர்ஜன்டினாவில் வாகன ஊர்வலமாக சென்ற கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்
    10) 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி- 41 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா

КОМЕНТАРІ •