திருநள்ளாரை விட 5 மடங்கு சிறப்புமிக்க ஸ்தலம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • தல வரலாறு
    மேருமலையில் ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் கடும் யுத்தம் நடந்தது. அப்போது வாயுபகவானால் வீசி எறியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றான மணிகூடகிரி ஆவூரிலும், சுந்தரகிரி திருநல்லூரிலும் விழுந்தது. பசுக்களால் பூசிக்கப்பட்டதால் இவ்வூர் ஆவூர் எனப்பட்டது பல ரிஷிகளும் தவமிருந்த தலம். காமதேனு, பிரம்மன், சப்தரிஷிகள், இந்திரன், சூரியன், மகாவிஷ்ணு, நவக்கிரகங்கள், தசரதர் போன்றோர் வழிபட்ட தலம். இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஐந்தடி உயரம் கொண்டது. ஏழடி உயரத்தில் வில்லும், அம்பும் ஏந்திய நிலையில் முருகப்பெருமான் காணப்படுகிறார்.
    ஆவூர்; கோயில் - பசுபதீச்சுரம்.
    வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம்.
    காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ + வந்த + குடி = கோவந்தகுடி ஆயிற்று
    கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயு தேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.
    இங்குள்ள இரு அம்பிகைகளில், மங்களாம்பிகை இத்தலத்தில் உள்ள குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    பங்கஜவல்லி அம்பாள்-இதுவே, பழமையானது. (தேவாரத்தில் 'பங்கயமங்கை விரும்பும் ஆவூர் ' என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.
    இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது.

КОМЕНТАРІ • 93