கர்ம யோகம்

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அன்னதானம் வழங்கப்படும்.
    ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை இராகு கால பூஜை நடைபெறும்.
    பிரதி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வேத பாராயணம் நடைபெறும்.
    *****************************
    For more videos
    Like, Share and Subscribe
    Further Contact :
    Pon Parameswara Samigal
    73737 03993, 89406 04777
    Prediction Telling via Siddha trance, Horoscope Reading, Face Reading, Soul Aura Reading, Psychological Counselling for Stressed Person, Pendulam dousing, gemmology, Pronology, Signology, vasthu consultation and Correction without any demolition, vasthu correction through Pyramid Erection.
    Copyrights Owned By - Servaragini Foundation, Salem, TN
    ஷோடஷ அபிஷேக பலன்கள்:
    1. காவிரி நீர் - துணிவு
    2. மஞ்சள் -இளமை
    3. பால் -ஆற்றல்
    4. தயிர் -புகழ்
    5. பன்னீர் -நன்மக்கள்
    6. இளநீர் -ஆயுள்
    7. பானகம் -கண் திருஷ்டி விலகும்
    8. எலுமிச்சை சாறு-பெருமை
    9. திருமஞ்சனம்-பொன்
    10. பஞ்சாமிர்தம்-கல்வி
    11. தேன்-அறிவு
    12. அரிசி மாவு-நோயின்மை
    13. தீர்த்தப்பொடி-பொருள்
    14. ஸ்வர்ணம்-வெற்றி
    15. சந்தனம்-நம்பிக்கை.
    16. விபூதி-முயற்சி
    ஹோமம்:சரப, சூலினி, பிரத்யங்கரி ஆலிங்கன வேள்வி. பானு வாரத்தில் அந்தி வேளையில் அமிர்தராகு காலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வேள்வி யில் 108 திரவியங்கள், நவதானியங்கள், அரசு, புரசு, மா ஆகியவற்றின் சாமித்துகளை பயன்படுத்தி சுத்தமான பசு நெய் கொண்டு ஆஹதி செய்து தேர்ந்தேடுக்கப்பட்ட காய் ந்த மிளகாய்களால்(வர மிளகாய்)அக்னியில் ஸ்தாபனம் செய்து மூவரையும் குளிர வைத்து வேண்டும் வரம் பெற்றுக்கொள்ள இந்த நிகம்பலா யாகத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம். ஹோமத்தில் கலந்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்.*தீய சக்திகளை அகற்றும் *திருமண தடையை வில க்கும்.*குழந்தை பேறு கிடைக்கும்.*தீராத நோய் தீரும்*கடன் விலகும் *குபேர சம்பத்து கிடைக்கும்*பதவி உயர்வு கிடைக்கும்.
    சேலம் பகுதியில் உள்ள சுயம்பு, பஞ்சபூத ஸ்தலங்கள்.
    சுயம்பு லிங்க கோவில்கள்: சேலம் மாவட்டம் 1.சுகவனேஸ்வரர் கோவில்:சேலம் நகரத்தின் மத்தியில் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.மூல லிங்கம் சற்று சாய்ந்து
    காணப்படும். வேடனால் வெட்டப்பட்ட தழும்பு முடியில் உள்ளது. சுகபிரம்ம மகரிஷி கிளி உருவம் கொண்டு வழிபட்ட ஸ்தலம்.
    2. கரபுரநாதர் கோவில்:உத்தமசோழபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. ஔவையாருக்கு மாலையிட்டால் திருமண தடை விலகி திருமணம் நடைபெறும் என்பது ஐதீ கம்.திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிஅம்மனுக்கு முத்துமாலை அணிவித்தார் என்றும், அந்த முத்துமாலை இன்றும் மீனாட்சி அம்மனின் கழுத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காளங்கிநாதர் வழிபட்ட கோவில்.
    3. வீரட்டேஸ்வரர் கோவில் :பில்லுர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. தாருகாட்சன், கமலாட்சன், வித்துன்மாலி எனும் அறக்கர்களின் மாளிகைகளை தனது சிரிப்பில் எரித்து தகனமாக்கினார். அம்மாளிகைகள் தங்கம், வெள்ளி, இரும்பால் செய்யப்பட்டவை. ஒரே நேரத்தில் தேவர்கள், அசுரர்களின் ஆணவத்தை அடக்கினார்.
    4. பீமேஸ்வரர் கோவில்: மாவுரெட்டியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் தற்பொழுது உள்ள நாமக்கல் மாவடத்தில் உள்ளது. அஸ்தினாபுரத்தில் ஏற்பட்ட கடும்பஞ்சம் தீர, பஞ்ச பாண்டவர்கள் தென்திசை சென்று புருஷாமிருகத்தை கொண்டுவருவதன் மூலம் அஸ்தினாபுரத்தின் பஞ்சம் தீரும் என கூறப்பட்டதன் மூலம் அங்கு கொண்டு சென்று பஞ்சம் தீர்க்கப்பட்டது. புருஷா மிருகம் பஞ்ச பாண்டவர்களை தாக்கியதால் பயந்த பஞ்ச பாண்டவர்கள், சிவலிங்கம் அமைத்து பூ ஜித்தனர்.இப்படியாக இது பீமனால் அமைக்கப் பட்ட சிவலிங்கம் என்பதால் இவருக்கு பீமேஸ்வரர் என பெயர் வந்தது.
    5. திருவேலீஸ்வரர் கோவில்: நஞ்சை இடையார் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவலிங்க திருமேனி பீமனால் செய்யப்பட்டது. என்பது சிறப்பு. பீமானின் கைவிரல் தடங்கள் ஸ்வாமியின் திருமேனியில் காணலாம். இத்திருக்கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இத்தலத்தில் ஆழ்வார்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது சிறப்பு. பீமனுக்கு அபிவிருத்த தோஷம் நீங்கியது.
    பஞ்சபூத ஸ்தலங்கள்:வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ளது.
    1.தான்தோன்றீஸ்வரர் கோவில்(பேளூர்). இந்த கோவிலில் உள்ள சிவலிங்க திருமேனி உளிபடாமல், சுயம்புவாக தானே தோன்றியதால் இவருக்கு தான்தோன்றிஸ்வரர் என்ற பெயர். சித்திரை 3-ம் நாள் முதல் 10-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சுவாமி மீது விழும். இக்கோவிலில் பிரசாதம் மண் வழங்கப்படுகிறது. கணம்புல்ல நாயனார் பிறந்தஊர். பஞ்சபூத ஸ்தலங்களில், இது மண் ஸ்தலமாக போற்றப்படுகிறது. மா, பலா, இழுப்பை மூன்றும் சேர்ந்து ஒரே மரமாக காட்சி அளிக்கிறது.
    2.சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில்:ஏத்தாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது நீர் ஸ்தலமாக போற்றப்படுகிறது. பிரிந்த தம்பதியர் இக்கோவிலில் உள்ள வில்வமரத்தை சுற்றி வந்தால் ஒற்றுமை ஏற்படும்.
    3. காயநிர்மலேஸ்வரர் கோவில்:ஆத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது நெருப்பு ஸ்தலமாக போற்றப்படுகிறது. தீப ஆராதனை காட்டப்படும் பொழுது கண்ணாடியை போல் லிங்கதிருமேனி எதிரொலிப்பதை பார்க்கலாம். வசிஷ்ட முனிவருக்கு ஜோதி வடிவமாக காட்சி அளித்தார்.
    4. காமநாதேஸ்வரர் கோவில் :ஆறகளுர் எனும் இடத்தில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது வாயு ஸ்தலம். இத்தலத்தில் அஷ்ட பைரவர்கள் வீற்றுஇருப் பதால் இது பைரவ ஸ்தலமாக போற்றப்படுகிறது. ஆறு அகழிகளால் சூழப்பட்ட தால் ஆறகளுர் எனப் பெயர் பெற்றது. மன்மதன் வழிபட்டதால் காமநாதீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். பிரமஹத்தி தோஷம் விலகும்.
    5. சொர்ணபுரிஸ்வரர் கோவில் :கூகையூர் எனும் இடத்தில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது ஆகாய ஸ்தலம்.3-ம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது

КОМЕНТАРІ • 2

  • @78054
    @78054 Рік тому

    ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி

  • @shanmugasundaram9037
    @shanmugasundaram9037 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏