ரோஜாப்பூ கொண்டு வந்து - ஆடி வெள்ளிக்காக ஒரு பாடல் (with lyrics) @SparklingSriSisters

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • ‪@sparklingsrisisters5291‬
    #prathiksha
    #sparklingsrisisters
    #devotionalsongs
    #easydevotionalsongs
    #songsforkids
    ரோஜாப்பூ கொண்டு வந்து எங்கள்
    ராஜேஸ்வரியை பூஜை செய்தால்
    தேசாதி தேசம் மெச்சும் ஒரு
    ராஜாவைப்போல் வாழச் செய்வாள்
    முல்லைப் பூ கொண்டு வந்து எங்கள்
    மோகனாங்கியை பூஜை செய்தால்
    இல்லை என்று சொல்லாமலே
    தனம் அள்ளி அள்ளித் தந்திடுவாள்
    மருக்கொழுந்து கொண்டு வந்து எங்கள்
    மனோன்மணியை பூஜை செய்தால்
    திருக்கோலம் கொண்டு அங்கே
    தினந்தோறும் வந்து நிற்பாள்
    ஜாதிப்பூ கொண்டு வந்து சுயம்
    ஜோதி இவளை பூஜை செய்தால்
    ஓதி உணரா வித்தை எல்லாம்
    தந்து மேதை என்று ஆக்கிடுவாள்
    மகிழம்பூ கொண்டு வந்து எங்கள்
    மாதங்கியை பூஜை செய்தால்
    மனமாகாக் கன்னியர்க்கு
    திருமணமும் நடத்தி வைப்பாள்
    தாழம்பூ கொண்டு வந்து எங்கள்
    தாட்சாயணியைப் பூஜை செய்தால்
    வாழாப் பெண்ணை நாதனுடன்
    வாழும் படியாய் செய்திடுவாள்
    பத்ரம் பல கொண்டு வந்தே
    எங்கள் பகவதியை பூஜை செய்தால்
    இத்ரை மேல் உள்ளவர்க்கே
    புத்ர பாக்கியம் தந்திடுவாள்
    தாமரைப் பூ கொண்டு வந்தே எங்கள்
    ஷ்யாமளியை பூஜை செய்தால்
    தாமதம் தான் செய்யாமலே அவள்
    தாலிப் பிச்சை தந்திடுவாள்
    மல்லிகைப்பூ கொண்டு வந்தே எங்கள்
    மகேஸ்வரியை பூஜை செய்தால்
    பில்லி, சூன்யம், ஏவல் எல்லாம்
    பின்னாலே ஓடச் செய்வாள்
    சண்பகப்பூ கொண்டு வந்தே எங்கள்
    அம்பிகையை பூஜை செய்தால்
    ஜன்மாந்த்ர பாவம் எல்லாம்
    தீர்த்து விலக்கி ஓட்டிடுவாள்
    இருவாட்சி கொண்டு வந்தே எங்கள்
    ஹிரண்மினியை பூஜை செய்தால்
    இருள் சூழ்ந்த நெஞ்சினிலே ஞான
    ஒளி வீசச் செய்திடுவாள்
    அரளிப்பூ கொண்டு வந்தே எங்கள்
    ஆரளகேசியை பூஜை செய்தால்
    அருள்புரிந்து ஆதரித்து அனுக்கிரகமும் செய்திடுவாள்

КОМЕНТАРІ • 4

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 8 місяців тому

    அருமை அன்புப் பேத்தியே ! நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அம்மா !

  • @meenashiimeenashii7069
    @meenashiimeenashii7069 Місяць тому

    Vaazhga Vaazhga Vaazhga Valamudan Nalamudan Sri Bagavan Aruludan vaazhiya Pallandu pallandu pallandu

  • @meenashiimeenashii7069
    @meenashiimeenashii7069 Місяць тому

    Super super super o super

  • @chandrikar5513
    @chandrikar5513 11 місяців тому

    Super...... KANNA .....👌👌👏👏👏👏🎁🤩😍