Tamil cultural exhibition/தமிழ் கண்காட்சி/தமிழ் பாம்பரிய நடனம் மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சி
Вставка
- Опубліковано 4 січ 2025
- தமிழ் கண்காட்சி
தமிழ மிகவும் இனிமையான மற்றும் அழகான மொழியாகும். தமிழர்கள் பண்பாட்டு சிறப்பு மிக்கவர்கள்.
தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் உலகில் உள்ள அனைத்து மக்களாலும் போற்றப்படுவது ஆகும்.
நான் பண்பாடு எது என்பதை நாளைய தலைமுறையினர் உணர வேண்டும் என்ற நோக்குடன் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழர்களின் பாரம்பரிய உணவான கேழ்வரகு, வரகரிசி ,திணை ,சோளம், கம்பு போன்ற உணவு வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
தமிழர்களின் பண்பாட்டுடன் கலந்த ஒன்று அவர்களது கலை. தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பரதநாட்டியம் போன்றவை தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் கலைகள் ஆகும்.
குறுநில மன்னர்கள் அதியமான் நல்லி, ஆய், பாரிவள்ளல் போன்றவர்கள் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துரைத்தவர்கள் ஆவர்.
கண்ணகி, அவ்வையார், பாரதியார், இவர்கள் இல்லாமல் தமிழா???
தமிழர்கள் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் மட்டுமல்லாமல் வானவியல், அறுவை சிகிச்சை போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார் என்பதை பல நூற்குறிப்புகள் வழியாக நாம் அறியலாம்.