எலும்பு சம்பந்தமான நோய் நீங்க விங்குவிளை கழனிமிகு பதிகம் | சிவன் பக்தி பாடல்கள் | தேவாரம் திருமுறை

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #healthyliving #kavasam #tamil
    எலும்பு சம்பந்தமான நோய்கள் நீங்க மந்திரம் | விங்குவிளை கழனிமிகு பதிகம் | சிவன் பக்தி பாடல் தேவாரம்
    அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
    திருமுறை : மூன்றாம்-திருமுறை
    பண் : சாதாரி
    நாடு : தொண்டைநாடு
    தலம் : மாகறல்
    சிறப்பு: - திருவிராகம்
    சுவாமி : அடைக்கலங்காத்தநாதர்;
    அம்பாள் : புவனநாயகியம்மை
    "ஓம் நமச்சிவாய"
    திருச்சிற்றம்பலம்
    விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
    பாடல்விளை யாடல்அரவம்
    மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
    நீடுபொழில் மாகறலுளான்
    கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
    திங்களணி செஞ்சடையினான்
    செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
    தீவினைகள் தீருமுடனே. 1
    கலையினொலி மங்கையர்கள் பாடலொலி
    யாடல்கவின் எய்தியழகார்
    மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள்
    வீசுமலி மாகறலுளான்
    இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன்
    ஏந்தியெரி புன்சடையினுள்
    அலைகொள்புன லேந்துபெரு மானடியை
    யேத்தவினை யகலுமிகவே. 2
    காலையொடு துந்துபிகள் சங்குகுழல்
    யாழ்முழவு காமருவுசீர்
    மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
    ஏத்திமகிழ் மாகறலுளான்
    தோலையுடை பேணியதன் மேலொர்சுடர்
    நாகமசை யாவழகிதாப்
    பாலையன நீறுபுனை வானடியை
    யேத்தவினை பறையுமுடனே. 3
    இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
    உந்தியெழில் மெய்யுளுடனே
    மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன
    லாடிமகிழ் மாகறலுளான்
    கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
    செஞ்சடையி னானடியையே
    நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி
    பாடுநுக ராவெழுமினே. 4
    துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி
    தோன்றுமது வார்கழனிவாய்
    மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட
    மாடல்மலி மாகறலுளான்
    வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
    வானொர்மழு வாளன்வளரும்
    நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி
    யாரைநலி யாவினைகளே. 5
    மன்னுமறை யோர்களொடு பல்படிம
    மாதவர்கள் கூடியுடனாய்
    இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை
    யோரிலெழு மாகறலுளான்
    மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
    கங்கையொடு திங்களெனவே
    உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர்
    வானுலகம் ஏறலெளிதே. 6
    வெய்யவினை நெறிகள்செல வந்தணையும்
    மேல்வினைகள் வீட்டலுறுவீர்
    மைகொள்விரி கானல்மது வார்கழனி
    மாகறலு ளான்எழிலதார்
    கையகரி கால்வரையின் மேலதுரி
    தோலுடைய மேனியழகார்
    ஐயனடி சேர்பவரை அஞ்சியடை
    யாவினைகள் அகலுமிகவே. 7
    தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு
    தோய்வனபொன் மாடமிசையே
    மாசுபடு செய்கைமிக மாதவர்கள்
    ஓதிமலி மாகறலுளான்
    பாசுபத விச்சைவரி நச்சரவு
    கச்சையுடை பேணியழகார்
    பூசுபொடி யீசனென ஏத்தவினை
    நிற்றலில போகுமுடனே. 8
    தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு
    நீர்குவளை தோன்றமருவுண்
    பாயவரி வண்டுபல பண்முரலும்
    ஓசைபயில் மாகறலுளான்
    சாயவிர லூன்றியஇ ராவணன
    தன்மைகெட நின்றபெருமான்
    ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை
    யாயினவும் அகல்வதெளிதே. 9
    காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின்
    மேலுணர்வு காமுறவினார்
    மாலுமல ரானும்அறி யாமையெரி
    யாகியுயர் மாகறலுளான்
    நாலுமெரி தோலுமுரி மாமணிய
    நாகமொடு கூடியுடனாய்
    ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி
    யாரையடை யாவினைகளே. 10
    கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ்
    வீதிமலி காழியவர்கோன்
    அடையும்வகை யாற்பரவி யரனையடி
    கூடுசம் பந்தன்உரையான்
    மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில்
    மாகறலு ளான்அடியையே
    உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்
    தொல்வினைகள் ஒல்குமுடனே. 11
    "ஓம் நமச்சிவாய"
    திருச்சிற்றம்பலம்
    Other Songs:
    குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:
    • குழந்தை வரம் செல்வம் அ...
    திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:
    • திருமயிலை கற்பகாம்பாள்...
    ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :
    • ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ர...
    திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
    • நோய் நீங்கும் மந்திரம...
    Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
    / @shivaarpanam
    #Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #thirumurai #thiruchitrambalam #siva

КОМЕНТАРІ • 2

  • @kopikopi2362
    @kopikopi2362 8 днів тому

    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே🍃🧘🐮🧎🌒🔱🦜🪔🙇🪘🐍📿👣🥭ஓம் நமசிவாய. சொக்கநாத பெருமானே

  • @ramasamisons7926
    @ramasamisons7926 8 днів тому

    😂மெய் தான் அ🎉ரும்பி விதிர் விதிர்த்து விரையார் கழற்கு என்
    கைதலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
    பொய்தான் தவிர்த்துன்னைப் போற்றிசய சய போற்றியென்னுங்
    கைதான்நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉