Silambam | போர்க்கலைகள் -2 | Hands on media | Thiruthuraipoondi | Vedaranyam

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • தமிழர் வீர/தற்காப்பு/போர்க்கலைகள்
    தமிழரின் கலைகள் தான் உலகின் அனைத்து கலைகளுக்கும் முன்னோடியாகும் குறிப்பாக ஆசியாவில் உள்ள கலைகளுக்கு தாய் கலைகள் நம் தமிழர் கலைகளே ஆகும்
    நாம் அனைவரும் அறிந்ததே போதிதர்மர் எவ்வாறு நம் கலைகளை பரப்பினார் என்று, சில நபர்கள் போதிதர்மர் தான் தமிழர் கலைகளை உருவாக்கினார் என்று தவறாக நினைக்கிறார்கள்
    தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளா தற்காப்பு கலைகள் மற்றும் போர் கலைகளில் சிறந்து விழங்கினார்கள் அப்படி சிறந்து விழங்கிய வீரர்களில் ஒருவரே போதி தருமர்.
    நான் எதற்காக நமது இணைய பக்கத்திற்கு வீர/ தற்காப்பு/போர்க்கலைகள்
    என்று பெயர் வைத்துள்ளேன் என்று உஙகளில் பலர் நினைத்திருக்க வாய்புண்டு இந்த மூன்று பெயர்களும் ஒன்றைப்போல் இருந்தாலும் சற்று வேறு படும்.ஆனால் ஒன்றை ஒன்று இன்றி அமையாது
    வீர கலைகள்
    ---------------------
    தமிழர் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டுக்கள் அல்லது கலைகளை தான் வீரக் கலைகள் என்று குறிப்பிடுகிறேன் உதாரணமாக ஜல்லிக்கட்டு மல்லர்கம்பு கபடி இளவட்டக்கல்
    தற்காப்புக் கலைகள்
    --------------------------------
    தற்காப்புக் கலைகள் என்பது தனது தனிநபரையோ அல்லது குடும்பத்தையும் பாதுகாக்கும் கலைகளே தற்காப்பு கலைகளாக குறிப்பிடுகிறேன் போர் கலைகளும் ஒரு வகையில் தற்காப்பு கலை தான். பல போர் கலைகளும் அரசர் ஆட்சிக்கு பின் தற்காப்பு கலைகளாக மாறியது உதாரணம் களரி,சிலம்பம்
    போர்க்கலைகள்
    --------------------------
    போர்க்கலைகள் என்பது போர்களுக்கான விசேட பயிற்சிகள் ஆகும் இவை அரசர்கள்,படைத்தளபதி மற்றும்படைவீரர்களுக்கேன மாறுபடும்
    இப்பொழுது உள்ள ராணுவம் எப்படி பயிற்சிகள் பெற்று எதிரி நாட்டை தாக்குகிறதோ (war tactics and strategies) அதே போல்தான் பண்டை மன்னர்கள் போர்ப்படைகளை வைத்து போர் செய்தார்கள் உதாரணமாக
    எப்படி முன்னேற வேண்டும் எப்படித்தாக்கவேண்டும் எப்படி சுற்றி வளைக்கவேண்டும் இவற்றை உதாரணமாக கூறலாம்
    தமிழர் மறந்ததில் முக்கியமான விடையம் இவை மற்ற நாடுகளில் இவற்றை பயிற்சி செய்யாவிட்டாலும் அனைத்தும் புத்தக வடிவில் உள்ளது.
    நாம் நமது முன்னோர்கள் வெற்றிகளை மார்தட்டி பேசிக் கொள்கிறோம் ஆனால் அந்த வெற்றிகளுக்கு காரணமாக இருந்த போர்பயிற்கள் போர் கலைளை மறந்துவிட்டோம்
    நம் சேர,சோழ,பாண்டிய,பல்லவ மன்னர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவவை அவர்களின் உடல் வலிமை,ஆயுதப்பயிற்சி,போர் ஒத்திகை,வியூகங்கள்,போர் நுட்பங்கள்,அரண் அமைக்கும் முறை சுற்றி வளைக்கும் முறை,பாதுகாப்பு முறை மற்றும் சிறந்த தலமை
    என பல விடயங்கள் ஆகும்
    அரசர்களுக்கும்,தளபதிகளுக்கும் முக்கிய பங்குண்டு அரசர்கள் மற்றும் போர் படை தலமையிலே போர் நடைபெறும் தவறான தலமை பெரும் தோல்வியை சந்திக்க வாய்புண்டு. அரசர்கள் தாங்கள் பதவிக்கு வர முன்பே பல பயிற்சிகள்,பல நுட்பங்கள்,அரசியல் என பலவற்றை கற்ற பின்னே பதவியேற்பார்கள் அதில் போர் பயிற்குகளுக்கு முக்கிய பங்குண்டு
    உதாரணமாக வாள்வீச்சு,குதிரையேற்றம்,தேரேற்றம்,யானையேற்றம்,வில்வித்தை,தலமை ஏற்றல்
    குறிப்பாக மற்போர் விளையாட்டாகும்
    பண்டைய காலங்களில் போரிடும் இரண்டு நாடுகளிலும் சம அளவு படைகள் இருந்தால் பலி எண்ணிக்கை குறைப்பதற்காக மன்னர்கள்
    நிராயுதபாணியாக மோதி கொள்வர்கள் வென்றவர்களே நாட்டை ஆள்வார்கள். இந்த விளையாட்டை பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம் மிகவும் தொன்மையான விளையாட்டாகும்
    போர்க் கலைகள் என்றால் நிலத்தில் மட்டும் அல்ல. கடற்படையிடம் பல விடயங்கள் உள்ளது உதாரணமாக ஒரு கப்பலை கன்னி வைத்து பிடித்தல் அதாவது நினைத்த இடத்தில் கப்பலை வரவைத்து சுற்றி சேதப்படுத்தும் முறையே கன்னி/பொறி ஆகும்
    இப்படிப்பட்ட அனைத்து போர்க்கலைகள் மற்றும் போர் பயிற்சிகள் அன்னியர் ஆட்சியில் மன்னர் ஆட்சிக்கு பின்னர் அனைத்துமே மறைந்து போனது ஒரு சில கலைகள் தற்காப்புக்கவைகளாக மாறியது
    இவைகளை பற்றி நாம் அறியாமல் சேர,சோழ,பாண்டிய,பல்லவர்களின் பெருமை பேசுவது முட்டாள்தனம் காரணம் நம் முன்னோர்கள்
    வெற்றிக்கு இவையே காரணம் முன்னோர்கள் போர் என்றால் வெறும் எதிரியை கொல்லுவது என்று நினைக்கவில்லைபோருக்கு என்று ஓர் இலக்கணம் உருவாக்கி பல சட்டங்களை உருவாக்கி, ஒரு படையில் இவ்வளவு யானைப்படை,குதிரைப்படை காலாட்படை என அனைத்தையும் வகுத்துள்ளார்கள். எதிரிகளாக இருந்தாலும் பல விதிமுறைகளை பின்பற்றியே போர்கள் செய்தார்கள். போர்படைகளிலே பல பிரிவுகள் மற்றும் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் இருந்துள்ளன
    இவற்றை
    அனைத்தையும் மறந்து விட்டோம் ஒரு சில தகவல்கள் இலக்கியங்கள் மூலமாகவும் பண்டைய பாடல்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

КОМЕНТАРІ • 1