கிச்சாபாய் சந்தனக்கடை | 100 ஆண்டுகள் பழமை | Hello Madurai | App | TV | FM | Web

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • நம்ம ஊரு (மதுரை) நம்ம ஷாப் என்ற பெயரில் மதுரையில் உள்ள முக்கியமான அத்தியாவசியமான பொருட்கள் அடங்கிய கடைகள் பற்றி காணப்போகின்றோம். இதில் பழமையான கடைகள் முதல் புதிய கடைகள் வரை இடம்பெறும். முதன் முறையாக தேர்முட்டி அதாவது கீழமாசி வீதியில் உள்ள பலதரப்பட்ட கடைகள் குறித்து வரும் நாட்களில் ஒவ்வொன்றாக காணப்போகினறோம்.
    அந்த வகையில் முதன் முறையாக 103 வருடங்களுக்கும் மேலாக கீழமாசி வீதியில் கிச்சாபாய் சந்தனக்கடை பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்துள்ளோம். மூன்று தலை முறையாக இங்கு சந்தனக் கடை நடத்தப்பட்டு வரும் இவர்களின் சந்தனம் பிரபலம். அதேபோல் பூனையிலிருந்து பெறக்கூடிய புனுகு இன்றளவும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
    நம்மிடம் மூன்றாம் தலைமுறையான உஷனே் பாய் இதுகுறித்து கூறுகையில், அந்த காலத்தில் 25 பைசாவிற்கு 25 கிராம் சந்தனம் கொடுத்தோம். இப்பொழுது 10 ரூபாய்க்கு கொடுக்கின்றோம். புனுகுக்கு என்றே பூனை ஒன்றினை வளர்த்து வந்தோம். விலங்குகள் நல அமைப்பு தடுப்பு சட்டத்தின் படி அதை இப்பொழுது வளர்ப்பதில்லை என்றார். நமது கேமராமேன் அண்ணே இந்த இடத்தில் ஒரு கூண்டில்தான் அந்த பூனை இருக்கும் என்று ஆச்சர்யமாக கூறினார். ஆனால் நான் பார்த்ததில்லை.
    கிச்சாபாய் கடையின் சந்தனம் வாசம் அதைக் கடக்கும்போது நம்மை கவராமல் இல்லை. அன்றைக்கு 4 கடைகள் மட்டுமே இருந்த நிலையில் இன்றைக்கு இதுபோன்ற சந்தனக் கடைகள் 40 உருவாகி விட்டது என்றும், வியாபாரத்தில் இன்றைக்கு சம்பாரிப்பது சவாலன விசயம் என்றும் தெரிவித்தார்.
    நாம் பேட்டி எடுக்கும்போதே பலரும் அவரிடம் சந்தனம் மற்றும் புனுகு வாங்கிச் சென்றனர். கூடுதலாக இங்கு மந்திரிக்கும் வழக்கமும் இன்றுவரை இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். சவ்வாது மையும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மை கண் திஸ்டியை போக்க கூடியது என்று நம்மிடம் கடை உரிமையாளர் உஷேன் கூறினார். நாம் கேள்விகள் கேட்கும் நேரத்தில் கடையில் இருந்த இரு சிறுவர்களின் ஆர்வம் போஸ் கொடுப்பதில் இருந்ததை பார்த்ததும் அவர்களையும் பதிவு செய்த பிறகே அங்கிருந்து நகர்ந்தோம்.
    கீழமாசி வீதி வழியெங்கும் பல்வேறு கடைகள் எங்களை எப்போது பதிவு செய்வீர்கள் என்பது கேட்பதுபோல் என்னால் உணரப்பட்டது. ஒவ்வொன்றாக எடுப்போம் என்ற நம்பிக்கையில் சந்தன வாசத்துடன் அங்கிருந்த டிராபிக் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கிளம்பினோம். அடுத்த ஒரு கடையில் நாம் சந்திப்போம். இப்படிக்கு உங்கள் ஹலோ மதுரை மு.ரமேஷ்.
    #hellomadurai #hellomaduraitv #maduraiapp
    _________________________________________________________
    இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.co...
    💓 Facebook : / maduraivideo
    💓web site :www.hellomaduraitv.com
    💓web site :www.hellomadurai.in
    💓web site :www.tamilvivasayam.com
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________

КОМЕНТАРІ • 32

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 2 роки тому +42

    தென் மாவட்டங்களில் மதுரை மாலை கோனார் சந்தனம் பேமஸ்.

  • @venkadesh2023
    @venkadesh2023 2 роки тому +19

    மதுரைக்கு சந்தனம்னாலே
    அது மாலைக்கோனாா் சந்தனம்மட்டும் தான்

    • @hellomadurai
      @hellomadurai  2 роки тому

      நிச்சயமாக. அவரும் பிரபலமானவர்தான்.

  • @pvnpcreation7296
    @pvnpcreation7296 2 роки тому +7

    மாலைக்கோனார் சந்தனம் 💥🤙

  • @kamalmasterdancestudio
    @kamalmasterdancestudio 2 роки тому +8

    This is Our shop my Mama Shop
    வாழ்த்துக்கள் Mama

  • @malonganeshamoorthy7794
    @malonganeshamoorthy7794 Рік тому +1

    ஏலேமாலைக்கோனார் சந்தனம் தான் நம்ம ராமநாதபுரம்.

  • @SankarSankar-w5w1j
    @SankarSankar-w5w1j Рік тому +1

    சந்தனப் பவுடர் மொத்த தயாரிப்பு எங்க தயாரிக்கிறார்கள்

  • @shekarj848
    @shekarj848 11 місяців тому

    Online booking service available 🙏🏻

  • @sivanithisb6368
    @sivanithisb6368 2 роки тому +2

    So என்ற வார்த்தை அதிகமாக வருது,

    • @hellomadurai
      @hellomadurai  2 роки тому

      அதுவேற ஒன்னுமில்ல ... நா சினிமா நடிகர் ஷோ ரசிகன். அதனால ஷோ, அதிகமா வருது. கண்டிப்பா ஷோ இல்லாம ஷோக்கா பேச கத்துக்குறேன்.

  • @gokuljeyaram1291
    @gokuljeyaram1291 2 роки тому +2

    பெயர் தவறாக பதிவு செய்து உள்ளீர்கள் கிச்சா பாய் இல்லை சிச்சா பாய்

    • @antojoseph2267
      @antojoseph2267 2 роки тому

      North indian aah ivangha

    • @hellomadurai
      @hellomadurai  2 роки тому

      தகவலுக்கு நன்றிகள் ஐயா

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 2 роки тому +1

    Online la anupivingala

    • @hellomadurai
      @hellomadurai  2 роки тому

      தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom Рік тому +6

    மதுரைல மாலைக்கோனார் சந்தனம் தான் ஃபேமஸ் எங்க கோயில் பெருங்கும்பிடு கிடா வெட்டுக்கு அங்க தான் வாங்குவோம்....

  • @மன்னன்-ன7ர
    @மன்னன்-ன7ர 3 роки тому +7

    சிறப்பு ஐயா
    4 தலைமுறையாக தொடரும் பாரம்பரியம்

  • @rainbowyoutubechannel6902
    @rainbowyoutubechannel6902 2 роки тому +3

    மதுரை என்றாலே சந்தானத்திற்கு

  • @karthikrudset
    @karthikrudset 3 роки тому +3

    Ivar manthirithu thayathum poduvar

  • @Maayaandi
    @Maayaandi 3 місяці тому

    சந்தனகட்டையில் இருந்து எப்படி இந்த கலர் சந்தனம் தயார் செய்கிறார்கள் என்ற செய்முறை பற்றி முழு விடியோ போடுங்கள் சகோதரரே

  • @Eaglemusic8940
    @Eaglemusic8940 Рік тому +1

    Wholesale a ketikuma

  • @rksgp9976
    @rksgp9976 6 місяців тому

    மாலைக்கோனார் சந்தனக் கடை தான் best

  • @murugesanp05
    @murugesanp05 Рік тому

    Sichabai

  • @anbarasun9492
    @anbarasun9492 2 роки тому +1

    Congratulations