horror story crime story ghost story full story Tamil Audiobooks online/நிம்மி nimmi@gktamilnovels

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • ஒரு தற்கொலை வழக்கில் துப்பு துலக்கச் செல்லும் விஷாலுக்கு வித்தியாசமான அனுபவம் நேரிடுகிறது. அது தற்கொலையா? கொலையா? கொலை என்றால் யார் கொன்றது எதற்காக?
    விஷால் அதிரடியில் நிம்மி ஒரு அசத்தலான ஹாரர் த்ரில்லர்.
    நாவலிலிருந்து
    எதார்த்தமாக பக்கவாட்டில் பார்த்த விஷால் அதிர்ந்தான். அது கல்லறை.
    இருதயம் அதிகமாகத் துடித்தது.
    ஏன் தன் வாழ்வில் மட்டும் இப்படி நடக்க வேண்டும் என்று குழம்பிய விஷாலின் மனம் கட்டளையிட்டது.
    முதலில் இங்கிருந்து ஓடு ஏதோ விபரீதம்
    விஷால் பைக்கின் மீது அமர்ந்தான். காற்று பலமாக வீச பயந்துபோன விஷால் கிக்கரை தாறுமாறாக உதைத்தான். அவனுடைய நேரத்திற்கு அது ஸ்டார்ட் ஆகவில்லை.
    எப்படியாவது தப்பித்து விட வேண்டும் இங்கிருந்து.
    விஷாலுக்கு வியர்த்துக் கொட்டியது. மீண்டும் கிக்கரை உதைக்க முயன்ற நொடியில் அவன் தலைக்கு மேலே பயங்கரமாய் சத்தமிட்டபடி வவ்வால் ஒன்று பறந்தது. ஒரு நிமிடம் உயிர் போய் உயிர் வந்த உணர்வு விஷாலுக்கு.
    பேசாமல் ஸ்டேஷனிலேயே தங்கியிருக்கலாம். தேவையா? இதெல்லாம். தன்னைத் தானே கடிந்து கொண்டான்.
    காற்றின் வேகம் அதிகரித்தது போல் தோன்றியது. விஷால் அந்த வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சட்டென்று காற்று சூறாவளியாய் சுழன்றது. பைக்கை இறுக்கிப் பிடித்தபடி நின்றான் விஷால். இரண்டு நிமிடங்கள் நீடித்த சூறாவளி மெல்ல அமைதியானது போல் தோன்ற அதன் மையத்தில் டார்ச் அடித்தான் விஷால்.
    உச்சகட்டமாக அதிர்ந்தான்.
    அங்கே ஒன்று முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தது.
    விஷாலுக்கு பயத்தில் பேச்சு வரவில்லை. ஒன்றும் செய்யத் தோன்றாமல் அமைதியாக அதையே பார்த்தான்.
    அது என்ன செய்யும்? தாக்குமோ? விஷால் அசையாமல் அதையே பார்த்தான்.
    அது சட்டென்று திரும்பி விஷாலைப் பார்த்தது. அதன் முகம் முழுவதும் ரத்தம் வழிந்தபடி இருக்க ஒரு கண் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் குழி மட்டுமே இருந்தது.
    Amazon KDP India
    www.amazon.in/...
    Amazon KDP US
    www.amazon.com...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    ஷர்மி (வாசித்தவர்)
    #crimestory
    #horrorstory #ghoststory #horrorstories #ghoststories
    #tamilaudionovels
    #tamilaudiobooks
    #tamilvoiceover
    #horrorlovetamil
    #gktamilnovels
    #gk

КОМЕНТАРІ • 25