யாருக்கு வெற்றி ? -திரு எம்.ஜி.ஆர் || நாடோடி மன்னன் வெற்றி விழா மலர் || பாகம் - 02

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #mgr #எம்ஜிஆர் #நாடோடி மன்னன் #nadodimannan #tamilmovie #mgrfilms #எம்ஜிஆர்பிக்சர்ஸ் #எம்ஜியார்பிக்சர்ஸ்
    நாடோடி மன்னன் வெற்றி விழா மலர் புரட்சி தலைவர்
    எம்.ஜி.ஆர் அவர்கள் எழுதிய யாருக்கு வெற்றி
    நாடோடி மன்னன் என்பது 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடி சாகசத் திரைப்படமாகும். இப்படத்தின் மூலம் ம. கோ. இராமச்சந்திரன் திரைப்பட இயக்குநராக ஆனார். இத்திரைப்படத்தில் அவர் பி. பானுமதி, எம். என். ராஜம், பி. சரோஜாதேவி ஆகியோருடன் இரட்டை வேடத்தில் நடித்தார். எம். என். நம்பியார், பி. எஸ். வீரப்பா, எம். ஜி. சக்கரபாணி, டி. கே. பாலச்சந்திரன், சந்திரபாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.
    18 இலட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் சக்ரபாணி மற்றும் ஆர். எம். வீரப்பனுடன் இணைந்து தயாரித்தார். திரைக்கதையை சி. குப்புசாமி, கே. சீனிவாசன், ப. நீலகண்டன் ஆகியோர் எழுதினர். உரையாடல் எழுதும் பொறுப்பை கண்ணதாசனும் ரவீந்தரும் ஏற்றனர். ஜி. கே. இராமு ஒளிப்பதிவு செய்ய, கே. பெருமாள், சி. பி. ஜம்புலிங்கம் ஆகியோர் படத்தொகுப்பை மேற்கொண்டனர். எஸ். எம். சுப்பையா நாயுடு, என். எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோர் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் போன்றவற்றிற்கு இசையமைத்தனர். இப்படத்தில் இடம்பெற்ற "தூங்காதே தம்பி தூங்காதே", "தாடுக்காதே என்னை தடுக்காதே", "சும்மா கிடந்த நிலத்தை" மற்றும் "செந்தமிழே வணக்கம்" போன்ற பாடல்கள் பெருவெற்றி பெற்றன.
    படத்தின் முதல் பாதி கருப்பு, வெள்ளையிலும், அடுத்த பாதி கோவாகலரிலிம் எடுக்கப்பட்டது. நாடோடி மன்னன் 22, ஆகத்து, 1958 இல் வெளியானது. நேர்மறையான விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றது. இது வணிகரீதியாக வெற்றியடைந்தது. மொத்தம் ஒரு கோடியே பத்து இலட்சம் வசூலித்தது. இதன்மூலம் இராமச்சந்திரன் நடித்த மதுரை வீரன் (1956) படத்திற்குப் பிறகு ஒரு கோடி வசூலித்த இரண்டாவது தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. இது வெள்ளி விழா படமாக மாறியது. நாடோடி மன்னன் தமிழ்த் திரையுலகில் வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்றது. இது இராமச்சந்திரனின் நடிப்பு மற்றும் அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஒரு திருப்புமுனையாக மாறியது.
    எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்
    எம். ஜி. இராமச்சந்திரன் மன்னர் மார்த்தாண்டன் & வீரங்கன்
    பானுமதி மதனா
    பி. எஸ். வீரப்பா ராசகுரு
    எம். என். ராஜம் ராணி மனோகரி
    சரோஜா தேவி ரத்னா
    எம். என். நம்பியார் பிங்காளன்
    சந்திரபாபு சகாயம்
    சகுந்தலா நந்தினி
    முத்துலட்சுமி நாகம்மா
    எம். ஜி. சக்கரபாணி கார்மேகம்
    கே. ஆர். ராம்சிங் வீரபாகு
    கே. எஸ். அங்கமுத்து பாப்பா

КОМЕНТАРІ • 1

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 місяці тому

    Ever green hero mass hero collection Chakravarty is only one puratchi thalavair Bharath Ratna Dr.MGR . Super movie Super songs🙏🙏🙏