3.24 - Part-2 - மண்ணில் நல்ல வண்ணம் - maNNil nalla vaNNam - (Thevaram class - Tamil)

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • List of other padhigam classes: thevaramclass....
    Part-1: • 3.24 - Part-1 - மண்ணில...
    Part-2: • 3.24 - Part-2 - மண்ணில...
    சம்பந்தர் தேவாரம் - 3.24 - மண்ணில் நல்ல வண்ணம் - கழுமலம் - (பண் - கொல்லி)
    sambandar tēvāram - 3.24 - maṇṇil nalla vaṇṇam - kaḻumalam - (paṇ - kolli)
    Odhuvar - Dharmapuram Swaminathan - தர்மபுரம் சுவாமிநாதன்: • Mannil Nalla Vannam |த...
    Sathgurunathan: • Pa. Sargurunathan - Ma...
    Tiruthani Swaminathan: • Mannil Nalla
    K.R.Easwaran & Srividya: • Mannil Nalla Vannam Va...
    பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses.
    இப்பதிகப் பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
    Blog post link: thevaramclass....
    Verses of this padhigam are available (in several languages) in the above URL.
    V. Subramanian
    #thevaram #thevaramclass #sambandar #தேவாரம் #தேவாரவகுப்பு #சம்பந்தர் #marriage #திருமணம்
    ===============
    சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.24 - கழுமலம் - மண்ணில் நல்ல வண்ணம் (பண் - கொல்லி)
    (தானனா தானனா தானனா தானனா - Rhythm)
    பாடல் எண் : 4
    அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே;
    நியர்-வளை முன்-கையாள் நேரிழை அவளொடும்,
    கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
    பெயர் பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே?
    பாடல் எண் : 5
    அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே;
    விடை அமர் கொடியினான்; விண்ணவர் தொழுதெழும்,
    கடை உயர் மாடம் ஆர் கழுமல வளநகர்ப்
    பெடை-நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே?
    பாடல் எண் : 6
    மற்று-ஒரு பற்று இலை நெஞ்சமே; மறை-பல
    கற்ற நல்- வேதியர் கழுமல வளநகர்ச்
    சிற்றிடைப் பேர்-அல்குல் திருந்திழை அவளொடும்
    பெற்று எனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே?
    பாடல் எண் : 7
    குறை வளைவது மொழி- குறைவு ஒழி நெஞ்சமே;
    நிறை-வளை முன்-கையாள் நேரிழை அவளொடும்
    கறை வளர் பொழில் அணி கழுமல வளநகர்ப்
    பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே?
    பாடல் எண் : 8
    அரக்கனார் அரு-வரை எடுத்தவன் அலறிட
    நெருக்கினார் விரலினால்; நீடு-யாழ் பாடவே
    கருக்கு-வாள் அருள்செய்தான், கழுமல வளநகர்ப்
    பெருக்கு-நீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே?
    (நீடியாழ் = நீடு + யாழ்; குற்றியலிகரம்)
    பாடல் எண் : 9
    நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய், அவர்
    அடியொடு முடி அறியா அழல்-உருவினன்;
    கடி கமழ் பொழில் அணி கழுமல வளநகர்ப்
    பிடி-நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே?
    பாடல் எண் : 10
    தார் உறு தட்டு-உடைச் சமணர் சாக்கியர்கள்தம்
    ஆர் உறு சொற்-களைந்து, அடியிணை அடைந்து உய்ம்மின்;
    கார் உறு பொழில் வளர் கழுமல வளநகர்ப்
    பேர்-அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே?
    பாடல் எண் : 11
    கரும்-தடம் தேன் மல்கு கழுமல வளநகர்ப்
    பெரும்-தடம் கொங்கையோடு இருந்த எம் பிரான்-தனை
    அரும்-தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
    விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே.
    ========
    Word separated version:
    ( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
    sambandar tēvāram - padigam 3.24 - kaḻumalam - maṇṇil nalla vaṇṇam (paṇ - kolli)
    (tānanā tānanā tānanā tānanā - Rhythm)
    pāḍal eṇ : 4
    ayarvu uḷōm eṇḍru nī asaivu oḻi neñjamē;
    niyar-vaḷai mun-kaiyāḷ nēriḻai avaḷoḍum,
    kayal vayal kudigoḷum kaḻumala vaḷanagarp
    peyar pala tudiseyap perundagai irundadē?
    pāḍal eṇ : 5
    aḍaivu ilōm eṇḍru nī ayarvu oḻi neñjamē;
    viḍai amar koḍiyinān; viṇṇavar toḻudeḻum,
    kaḍai uyar māḍam ār kaḻumala vaḷanagarp
    peḍai-naḍai avaḷoḍum perundagai irundadē?
    pāḍal eṇ : 6
    maṭru-oru paṭru ilai neñjamē; maṟai-pala
    kaṭra nal- vēdiyar kaḻumala vaḷanagarc
    ciṭriḍaip pēr-algul tirundiḻai avaḷoḍum
    peṭru enai āḷuḍaip perundagai irundadē?
    pāḍal eṇ : 7
    kuṟai vaḷaivadu moḻi- kuṟaivu oḻi neñjamē;
    niṟai-vaḷai mun-kaiyāḷ nēriḻai avaḷoḍum
    kaṟai vaḷar poḻil aṇi kaḻumala vaḷanagarp
    piṟai vaḷar saḍaimuḍip perundagai irundadē?
    pāḍal eṇ : 8
    arakkanār aru-varai eḍuttavan alaṟiḍa
    nerukkinār viralināl; nīḍu-yāḻ pāḍavē
    karukku-vāḷ aruḷseydān, kaḻumala vaḷanagarp
    perukku-nīr avaḷoḍum perundagai irundadē?
    (nīḍiyāḻ = nīḍu + yāḻ; kuṭriyaligaram)
    pāḍal eṇ : 9
    neḍiyavan piramanum ninaipparidāy, avar
    aḍiyoḍu muḍi aṟiyā aḻal-uruvinan;
    kaḍi kamaḻ poḻil aṇi kaḻumala vaḷanagarp
    piḍi-naḍai avaḷoḍum perundagai irundadē?
    pāḍal eṇ : 10
    tār uṟu taṭṭu-uḍaic camaṇar sākkiyargaḷdam
    ār uṟu soṟ-kaḷaindu, aḍiyiṇai aḍaindu uymmin;
    kār uṟu poḻil vaḷar kaḻumala vaḷanagarp
    pēr-aṟattāḷoḍum perundagai irundadē?
    pāḍal eṇ : 11
    karum-taḍam tēn malgu kaḻumala vaḷanagarp
    perum-taḍam koṅgaiyōḍu irunda em pirān-tanai
    arum-tamiḻ ñānasambandana sendamiḻ
    virumbuvār avargaḷ pōy viṇṇulagu āḷvarē.
    ========

КОМЕНТАРІ • 5

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 місяці тому

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 місяці тому

    🙏🌿🌹சிவாய நம🙏🙏🙏❤❤❤❤❤🎉

  • @s.swaminathan
    @s.swaminathan 2 місяці тому

    எளிமையான சிறந்த உரை🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 місяці тому

    அப்பாவையே பாடுகிறார் ஞானசம்பந்தர் பெருமான், அம்மையை இந்தப் பதிகத்தில் நன்கு புகழ்ந்து பாடியிருக்கிறா். எனவே நம் குறை தீர்ந்தது. "இனி யாதுமோர் குறைவில்லை." நல்ல கருத்துகள் பல தெரிந்துகொள்ள முடிகிறது.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 місяці тому +1

    ஐநூறு என்பது தவறு, ஐந்நூறு என்பதே சரி,
    செய்நன்றி என்பது தவறு,
    செய்ந்நன்றி என்பதே சரி,
    என்பதை இன்று புரிந்துகொண்டோம். நன்றி ஐயா.