அன்பின் தம்பிமாரே .. "பாடுகிற பாட்டில் நானே" .. ஆக்கம்: NT. Mohamed Ismail

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • பாடுகிற பாட்டில் நானே
    பக்குவமா சொல்லிப் புட்டேன்
    நாட்டம் வைத்து கேட்டுக் கொண்டால்
    நன்மையாகும் தம்பிமாரே
    வாகனத்தில் வேகம் கூட்டி
    மின்னலாக பாய்வதென்ன
    போகும் இடம் சேரும் முன்னே
    சோகத்தில் மாய்வதென்ன
    பெத்த மனம் தாங்கவில்ல
    கண்ணு ரெண்டும் பூத்திருச்சு
    பட்டமரம் ஆன பின்னே
    பரிதவிச்சு ஆவதென்ன
    மிச்சம் மீதி இருக்கும் நாளில்
    விபரீதம் வேணாமப்பா
    பணிவோடு கேளப்பா
    பசுமை வாழ்க்கை தானப்பா
    செல்ஃபோனின் காலமாச்சு
    ஹெட்ஃபோனும் மாட்டியாச்சு
    பக்கத்தில் நடப்பதென்ன
    பார்க்க மனம் என்னவாச்சு
    பார்க்க நேரம் போதவில்லை
    படுக்கும் போதும் வைப்பதில்லை
    தூக்கம் கெட்டுப் போன பின்னே
    உருண்டு புரண்டு இலாபமென்ன
    தட்டதட்ட காட்சி மாறும்
    ஷைத்தான்கள் ஏனப்பா
    கட்டுப்பாடு பேணப்பா
    காலம் போற்றும் தானப்பா
    ஏழு வயசில் கடமையாச்சு
    எல்லோருக்கும் தொழுகையாச்சு
    ஏந்தல் நபி சொன்ன வாக்கு
    ஏனிங்கு மறந்து போச்சு
    பூலோகம் நிலைப்பதில்ல
    பொன்னும் பொருளும் காப்பதில்ல
    பொன்னுலகம் சேர்த்து வைக்கும்
    பள்ளிவாசல் வருவதில்ல
    திண்ணமாக எண்ணம் கொண்டு
    தீர்க்கமாக செல்லப்பா
    தீமை போக்க கேளப்பா
    தொழுகை ஒன்றே தானப்பா
    பாடலாக்கம்: கவிஞர் "நூவன்னா தானா " (NT)
    முஹம்மது இஸ்மாயில் புகாரி
    பாடியவர்: காயல் S.I.முஹம்மது ராஃபிக்
    13.08.2023

КОМЕНТАРІ • 6