காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [27.12.2024]
Вставка
- Опубліковано 26 гру 2024
- 1) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார், அவருக்கு வயது 92 -தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
2) இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டதாக பிரதமர் மோதி இரங்கல் - மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மன்மோகன் சிங் விரிவான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் புகழாரம்
3) நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தியவர் மன்மோகன் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இரங்கல்
4) தொலைநோக்கு பார்வையுள்ள தலைவர் மன்மோகன் சிங் என மல்லிகார்ஜூன கார்கே புகழாரம் - தமது வழிகாட்டியை இழந்து விட்டதாக ராகுல் காந்தி புகழஞ்சலி
5) மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக ஆளுர் ஆர் என் ரவி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் இரங்கல்
6) 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு - திட்டமிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து
7) மன்மோகன் சிங்-க்கு அஞ்சலி செலுத்த இன்று காலை கூடுகிறது மத்திய அமைச்சரவை - முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
8) பால் புரஸ்கார் விருது பெற்ற சிறார்களுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடல் - அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு பிரதமர் வாழ்த்து
9) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் - இன்று அனைத்து மாவட்டங்களிலும் பாஜக, அதிமுக போராட்டம்
10) சீனாவில் நடைபெறும் கிங் கப் சர்வதேச பேட்மிண்டன் போட்டி- காலிறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரரை எதிர் கொள்கிறார் இந்திவின் யா லக்ஷயா சென்