பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - திருவும் மெய்ப்பொருளும் (திருமுல்லைவாயில்)

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • தருமமிகு சென்னையின் தேவார திருப்பதிகங்கள்
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    This video contains the rendition of the Devaara Thirumurai Paadalgal wrote and composed by Appar, Sundarar, Thirugnana Sambandar and Manikkavasagar are Saiva poet-saints of Tamil Nadu who lived sometime in the 7th century who were call as NAALVAR of Tamil. They composed so many hymns in complex meters of Tamil Poetry. These narrate an intense loving devotion (bhakti) to the Hindu god Shiva. The surviving compositions are preserved in the first three volumes of the Tirumurai, and provide a part of the philosophical foundation of Shaiva Siddhanta. They are the most prominent of the sixty-three Nayanars, Tamil Saiva bhakti saints who lived between the sixth and the tenth centuries CE. Periya Puranam, the eleventh-century Tamil book on the Nayanars compiled by Sekkizhaar. Sambandar is the first poet-saint featured in the Tirumurai, the canonical works of Tamil Saiva Siddhanta.
    / layamusicindia / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in

КОМЕНТАРІ • 17

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 16 днів тому +1

    செம்மேனி எம்மானை, அழல் வண்ணனை நீல வண்ணமாக மாற்றி பெருமாள் ஆக்கி விட்டீர்களே!

  • @kamaleswarichandran9382
    @kamaleswarichandran9382 20 днів тому

    சிவமே என் வரமே சிவசிவா

  • @licharimf
    @licharimf 2 місяці тому +3

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் திருத்தொண்டத்தொகை தந்த பெருந்தவத்தோர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽

  • @muthuswamyk7652
    @muthuswamyk7652 2 роки тому +8

    இந்த பிறவியில் நாம் பெற்ற புண்ணியம் சுந்தரர் திரு பதிகத்தை ஒதுவர் சற்குருநாதன் ஐயா ஓத நாம் கேட்பது. சிவாயநம.

  • @naresh_._
    @naresh_._ 2 роки тому +7

    திருச்சிற்றம்பலம்
    திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
    சீருடைக் கழல்கள்என் றெண்ணி
    ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
    ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
    முருகமர் சோலை சூழ்திரு முல்லை
    வாயிலாய் வாயினால் உன்னைப்
    பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 1
    கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
    கொடியிடை உமையவள் காண
    ஆடிய அழகா அருமறைப் பொருளே
    அங்கணா எங்குற்றாய் என்று
    தேடிய வானோர் சேர்திரு முல்லை
    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
    பாடிய அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 2
    விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
    வெருவிட வேழமன் றுரித்தாய்
    செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
    வாயிலாய் தேவர்தம் மரசே
    தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
    சங்கிலிக் காஎன்கண் கொண்ட
    பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 3
    பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
    பொறிவரி வண்டிசை பாட
    அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
    அலவன்வந் துலவிட அள்ளல்
    செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
    பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 4
    சந்தன வேருங் காரகிற் குறடும்
    தண்மயிற் பீலியுங் கரியின்
    தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
    கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
    வந்திழி பாலி வடகரை முல்லை
    வயிலாய் மாசிலா மணியே
    பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 5
    மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
    வள்ளலே கள்ளமே பேசிக்
    குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
    கொள்கையால் மிகைபல செய்தேன்
    செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
    திருமுல்லை வாயிலாய் அடியேன்
    பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 6
    மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
    வார்குழல் மாமயிற் சாயல்
    அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
    அருநடம் ஆடல் அறாத
    திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
    செல்வனே எல்லியும் பகலும்
    பணியது செய்வேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 7
    நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
    நாயினேன் தன்னையாட் கொண்ட
    சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
    தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
    செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
    தேடியான் திரிதர்வேன் கண்ட
    பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 8
    மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
    மாணிதன் மேல்மதி யாதே
    கட்டுவான் வந்த காலனை மாளக்
    காலினால் ஆருயிர் செகுத்த
    சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
    செல்வனே செழுமறை பகர்ந்த
    பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 9
    சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
    சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
    டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
    டருளிய இறைவனே என்றும்
    நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
    நாதனே நரைவிடை ஏறீ
    பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. 10
    விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
    வெருவிட நீண்டஎம் மானைத்
    திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
    செல்வனை நாவலா ரூரன்
    உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
    உள்குளிர்ந் தேத்த வல்லார்கள்
    நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
    நண்ணுவர் விண்ணவர்க் கரசே. 11

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 Рік тому +1

    ஓம் நமச்சிவாய 🙏

  • @ganessrinivaasvictorysucce5348

    ஓ்ம் சிவசிவஓம் ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்🙏

  • @deepak.r215
    @deepak.r215 7 днів тому

    🌹🌹🌹

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 7 місяців тому

    சிவசிவ.
    🙏🙏🙏🙏🙏

  • @bagyalakshmis8052
    @bagyalakshmis8052 2 роки тому +2

    யான் பெற்ற சிவப்பேறு ஐயாவின் தெய்வீகக் குரலில் இப்பதிகம் கேட்பது.

  • @bhamak5572
    @bhamak5572 4 місяці тому

    ஓம்சிவசிவஓம்

  • @venkataramajanakiramanjana1011
    @venkataramajanakiramanjana1011 2 роки тому +1

    மிக்க நன்று. திருபதிகங்களை இசையோடு கேட்கும் ஆனந்தமே தனி. நன்றி பல

  • @mohans9383
    @mohans9383 Рік тому

    திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹nalvar🙏🙏🙏🙏🙏மலரடி. போற்றி. 🙏🙏🙏🙏🙏ஓ. நமசிவாய. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹நமசிவாய. 🌹🌹🙏🙏🙏🙏🙏vazhgha🙏qqqq🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sivathin🙏🙏மேல். 🙏🙏சமயம். 🙏🙏🙏வேறில்லை. 🙏🙏அதில். 🙏🙏🙏🙏சார். 🙏🙏🙏sivamam🌹🌹🌹🙏🙏தெய்வத்தின். 🙏🙏🙏mel🙏🙏🙏வேறில்லை. அருமை🙏thirusitrampalam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nageswarim9674
    @nageswarim9674 4 місяці тому

    சிவாய நம*

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Рік тому +1

    ♥️🙏🙏🙏

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 6 місяців тому

    Shivaya Nama

  • @nagarajans1463
    @nagarajans1463 2 роки тому

    Om namasivaya