thiruppugazh - punamadandhaikku - திருப்புகழ் - புனமடந்தைக்கு - (Kanchipuram) - class

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses.
    திருப்புகழ் - புனமடந்தைக்கு - 998 (கச்சி - காஞ்சீபுரம்)
    thiruppugazh - punamadandhaikku - (Kanchipuram)
    Bhavya Hari: • Kanchipuram Thiruppuga...
    A.S. Raghavan: • 'Punamadandhaikku' - T...
    இப்பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
    thevaramclass....
    Verses are available in the above URL.
    #thiruppugazh #thiruppugazhclass #திருப்புகழ் #திருப்புகழ்வகுப்பு
    V. Subramanian
    ====
    Word separated version:
    திருப்புகழ் - புனமடந்தைக்குத் தக்க - (கச்சி - காஞ்சீபுரம்)
    ------------------------------------------------
    (தனதனந் தத்தத் தத்தன தத்தந்
    தனதனந் தத்தத் தத்தன தத்தந்
    தனதனந் தத்தத் தத்தன தத்தந் .. தனதான -- Syllabic pattern )
    புன-மடந்தைக்குத் தக்க புயத்தன்,
    .. .. .. குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும்
    .. .. பொருளை, நெஞ்சத்துக் கற்பனை முற்றும் .. பிறிது-ஏதும்
    .. புகலும் எண்பத்தெட்டு-எட்டு-இயல் தத்வம்
    .. .. .. சகலமும் பற்றிப் பற்று-அற நிற்கும்
    .. .. பொதுவை, என்று ஒக்கத் தக்கதொர் அத்தந்தனை, நாளும்
    சினமுடன் தர்க்கித்துச் சிலுகிக்கொண்டு
    .. .. .. அறுவரும் கைக்குத்திட்டு ஒருவர்க்கும்
    .. .. தெரிவு-அரும் சத்யத்தைத் தெரிசித்து, உன் .. செயல் பாடித்
    .. திசைதொறும் கற்பிக்கைக்கு, இனி அற்பம்
    .. .. .. திருவுளம் பற்றிச், செச்சை மணக்கும்
    .. .. சிறு-சதங்கைப் பொற்பத்மம் எனக்கு என்று .. அருள்வாயே?
    கன-பெரும் தொப்பைக்கு எட்பொரி அப்பம்
    .. .. .. கனி கிழங்கு இக்குச் சர்க்கரை முக்கண்
    .. .. கடலை கண்டு அப்பிப் பிட்டொடு மொக்கும் .. திருவாயன்,
    .. கவள துங்கக்-கைக் கற்பகம்*, முக்கண்
    .. .. .. திகழும்* நம் கொற்றத்து ஒற்றை-மருப்பன்,
    .. .. கரிமுகன், சித்ரப் பொற்புகர் வெற்பன்-தனை ஈனும்
    பனவி, ஒன்று-எட்டுச் சக்ர-தலப்-பெண்,
    .. .. .. கவுரி, செம்பொற்-பட்டுத் தரி அப்பெண்,
    .. .. பழய அண்டத்தைப் பெற்ற மடப்பெண், .. பணிவாரைப்
    .. பவ-தரங்கத்தைத் தப்ப நிறுத்தும்
    .. .. .. பவதி, கம்பர்க்குப் புக்கவள் பக்கம்
    .. .. பயில்-வரம் பெற்றுக், கச்சியில் நிற்கும் .. பெருமாளே.
    * - m is omitted here due to sandhi;
    ================== ==================
    tiruppugaḻ - punamaḍandaikkut takka - (kacci - kāñcīpuram)
    ------------------------------------------------
    (tanadanam tattat tattana tattam
    tanadanam tattat tattana tattam
    tanadanam tattat tattana tattam .. tanadāna -- Syllabic pattern )
    puna-maḍandaikkut takka buyattan,
    .. .. .. kumaran eṇḍru ettip pattar tudikkum
    .. .. poruḷai, neñjattuk kaṟpanai muṭrum .. piṟidu-ēdum
    .. pugalum eṇbatteṭṭu-eṭṭu-iyal tatvam
    .. .. .. sagalamum paṭrip paṭru-aṟa niṟkum
    .. .. poduvai, eṇḍru okkat takkador attandanai, nāḷum
    sinamuḍan tarkkittuc cilugikkoṇḍu
    .. .. .. aṟuvarum kaikkuttiṭṭu oruvarkkum
    .. .. terivu-arum satyattait terisittu, un .. seyal pāḍit
    .. disaidoṟum kaṟpikkaikku, ini aṟpam
    .. .. .. tiruvuḷam paṭric, ceccai maṇakkum
    .. .. siṟu-sadaṅgaip poṟpadmam enakku eṇḍru .. aruḷvāyē?
    gana-perum toppaikku eṭpori appam
    .. .. .. kani kiḻaṅgu ikkuc carkkarai mukkaṇ
    .. .. kaḍalai kaṇḍu appip piṭṭoḍu mokkum .. tiruvāyan,
    .. kavaḷa tuṅgak-kaik kaṟpagam*, mukkaṇ
    .. .. .. tigaḻum* nam koṭrattu oṭrai-maruppan,
    .. .. karimugan, citrap poṟpugar veṟpan-tanai īnum
    panavi, oṇḍru-eṭṭuc cakra-talap-peṇ,
    .. .. .. gavuri, semboṟ-paṭṭut tari appeṇ,
    .. .. paḻaya aṇḍattaip peṭra maḍappeṇ, .. paṇivāraip
    .. bava-taraṅgattait tappa niṟuttum
    .. .. .. bavadi, kambarkkup pukkavaḷ pakkam
    .. .. payil-varam peṭruk, kacciyil niṟkum .. perumāḷē.
    * - m is omitted here due to sandhi;
    ================== ==================

КОМЕНТАРІ • 7

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 7 місяців тому

    முருகா சரணம்.
    அயிலும், மயிலும், சேவலும் துணை.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 7 місяців тому

    வட மொழியும், தமிழும் கலந்து மணிப்ரவாளமாக அமைந்திருக்கிறது.
    விநாயகருக்கு குடுத்திருக்கும் உணவு விபரம் அருமை. அம்பாளின் வர்ணனைகள் தெளிவாக புரிகிறது. வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்வதால், நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. நன்றி ஐயா.

  • @RaviShankar-ie8co
    @RaviShankar-ie8co 7 місяців тому

    முருகா சரணம்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 7 місяців тому

    சம்பந்தப் பெருமானின், திருவீழிமிழலை பதிகத்தின் பாடலை சொல்லி, “ ஒன்றாய், வேறாய், உடனாய்” என்கிற சைவசித்தாந்த தத்துவத்தை விளக்கியது அருமை. எத்தனை நூற்றாண்டுகள் இடைவெளி இருந்தாலும், அருளாளர்கள் அனைவரும் ஒரே கருத்தை வலியுறுத்துவதில் ஒத்துப்போகின்றனர்.
    பரம்பொருள் ஒன்றுதான். அவரவர் விருப்பத்தின் பொருட்டு எப்பெயரிட்டு அழைத்தாலும் அவன் வந்து ஆட்கொள்வான். நன்றி ஐயா.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 7 місяців тому

    பாம்பன் சுவாமிகளும், நித்யப் பாராயணத்தில், நால்வரும் ஒன்றே என்று சொல்கிறார்.