- 410
- 452 447
CSI HOME CHURCH NAGERCOIL - Official
India
Приєднався 22 бер 2020
Nagercoil Home Church Official UA-cam Channel
Home Church C.S.I Nagercoil 12th January 2025 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 12th January 2025 Sunday English Service
Переглядів: 513
Відео
Home Church C.S.I Nagercoil 1st January 2025 New Year Family Song Service
Переглядів 1,5 тис.День тому
Home Church C.S.I Nagercoil 1st January 2025 New Year Family Song Service
Home Church C.S.I Nagercoil 1st January 2025 New Year English Service
Переглядів 409День тому
Home Church C.S.I Nagercoil 1st January 2025 New Year English Service
Home Church C.S.I Nagercoil 29th December 2024 Sunday English Service
Переглядів 81814 днів тому
Home Church C.S.I Nagercoil 29th December 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 25th December Christmas English Service
Переглядів 77014 днів тому
Home Church C.S.I Nagercoil 25th December Christmas English Service
Home Church C.S.I Nagercoil 22nd December 2024 Sunday English Service
Переглядів 70721 день тому
Home Church C.S.I Nagercoil 22nd December 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 15th December 2024 Sunday English Service
Переглядів 2 тис.28 днів тому
Home Church C.S.I Nagercoil 15th December 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 8th December 2024 Sunday English Service
Переглядів 475Місяць тому
Home Church C.S.I Nagercoil 8th December 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 1st december 2024 Sunday English Service
Переглядів 697Місяць тому
Home Church C.S.I Nagercoil 1st december 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 24th November 2024 Sunday Praise & Worship Service
Переглядів 381Місяць тому
Home Church C.S.I Nagercoil 24th November 2024 Sunday Praise & Worship Service
Home Church C.S.I Nagercoil 24th November 2024 Sunday English Service
Переглядів 633Місяць тому
Home Church C.S.I Nagercoil 24th November 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 10th November 2024 Sunday English Service
Переглядів 6162 місяці тому
Home Church C.S.I Nagercoil 10th November 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 3rd November 2024 Sunday English Service
Переглядів 5912 місяці тому
Home Church C.S.I Nagercoil 3rd November 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 27th October 2024 Sunday Praise & Worship
Переглядів 5772 місяці тому
Home Church C.S.I Nagercoil 27th October 2024 Sunday Praise & Worship
Home Church C.S.I Nagercoil 27th October 2024 Sunday English Service
Переглядів 6312 місяці тому
Home Church C.S.I Nagercoil 27th October 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 20th October 2024 Sunday English Service
Переглядів 6582 місяці тому
Home Church C.S.I Nagercoil 20th October 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 13th October 2024 Sunday English Service
Переглядів 7403 місяці тому
Home Church C.S.I Nagercoil 13th October 2024 Sunday English Service
Home Church CSI Nagercoil October 6th Sunday English Service
Переглядів 7853 місяці тому
Home Church CSI Nagercoil October 6th Sunday English Service
Home Church CSI Nagercoil September 29 Sunday English Service
Переглядів 5923 місяці тому
Home Church CSI Nagercoil September 29 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 22nd September 2024 Sunday Praise & Worship Service
Переглядів 5433 місяці тому
Home Church C.S.I Nagercoil 22nd September 2024 Sunday Praise & Worship Service
Home Church C.S.I Nagercoil 22nd September 2024 Sunday English Service
Переглядів 6953 місяці тому
Home Church C.S.I Nagercoil 22nd September 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 15th September 2024 Sunday English Service
Переглядів 7603 місяці тому
Home Church C.S.I Nagercoil 15th September 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 8th September 2024 Sunday English Service
Переглядів 7204 місяці тому
Home Church C.S.I Nagercoil 8th September 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 1st September 2024 Sunday English Service
Переглядів 4894 місяці тому
Home Church C.S.I Nagercoil 1st September 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 25th August 2024 Sunday Praise & Worship Service
Переглядів 4924 місяці тому
Home Church C.S.I Nagercoil 25th August 2024 Sunday Praise & Worship Service
Home Church C.S.I Nagercoil 25th August 2024 Sunday English Service
Переглядів 5444 місяці тому
Home Church C.S.I Nagercoil 25th August 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 18th August 2024 Sunday English Service
Переглядів 6574 місяці тому
Home Church C.S.I Nagercoil 18th August 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 11th August 2024 Sunday English Service
Переглядів 7835 місяців тому
Home Church C.S.I Nagercoil 11th August 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 4th August 2024 Sunday English Service
Переглядів 6405 місяців тому
Home Church C.S.I Nagercoil 4th August 2024 Sunday English Service
Home Church C.S.I Nagercoil 28th July 2024 Sunday Praise & Worship Service
Переглядів 6315 місяців тому
Home Church C.S.I Nagercoil 28th July 2024 Sunday Praise & Worship Service
Praise the lord 🙏
nice
Missing online Wednesday service. So rewatching this today. Feeling blessed.
Will be missing the Wednesday telecast this week :(
Super massages by pastor
1. அருள் நிறைந்தவர், பூரண ரட்சகர் தேவரீரே; ஜெபத்தைக் கேட்கவும் பாவத்தை நீக்கவும் பரத்தில் சேர்க்கவும் வல்லவரே. 2. சோரும் என் நெஞ்சுக்கு பேரருள் பொழிந்து பெலன் கொடும், ஆ! எனக்காகவே மரித்தீர், யேசுவே; என் அன்பின் ஸ்வாலையே ஓங்கச் செய்யும். 3. பூமியில் துக்கமும் சஞ்சலம் கஸ்தியும் வருகினும், இரவில் ஒளியும் சலிப்பில் களிப்பும் துன்பத்தில் இன்பமும் அளித்திடும். 4. மரிக்கும் காலத்தில் கலக்கம் நேரிடில், சகாயரே, என்னைக் கைதூக்கவும் ஆறுதல் செய்யவும் மோட்சத்தில் சேர்க்கவும் வருவீரே.
யோசுவா, Chapter 24 22. அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள். 23. அப்பொழுது அவன்: அப்படியானால் இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான். 24. அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள். 25. அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான். 26. இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி, 27. எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக் கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக் கடவது என்று சொல்லி, 28. யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான். 29. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நு}னின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நு}ற்றுப் பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான். 30. அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள்.
யேசுவை அன்றி வேறொரு ரட்சகர் காசினி தனிலுண்டோ, மனமே?-அவர் நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே, மோசம் போவதேன், மனமே? சரணங்கள் 1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப் பூதலம் வந்ததார், மனமே?-கொடும் யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய போதகம் செய்ததார், மனமே? - யேசு 2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ! பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அ லைந்து திரிவதேன், மனமே? - ஏசு 3. பூதல மீதினில் ஓதரி[1] தாம் பரஞ் சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால் பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று வேதமுரைக்கு தல்லோ மனமே? - ஏசு
Hi
சங்கீதம், Chapter 67 1. தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், 2. தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.) 3. தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. 4. தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்.(சேலா.) 5. தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக, சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. 6. பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். 7. தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
பின் செல்வேன் என் மீட்பரே இராகம்: தன்யாசி தாளம்: ஆதி பல்லவி பின் செல்வேன் என் மீட்பரே - நானும்மைப் பின் செல்வேன் என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் 1. என் சிலுவையை எடுத்தேன் - எல்லாம் விட்டு என்றும் நின்னையே அடுத்தேன் நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான் நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து - பின் 2. சிங்கம்போல கெர்ச்சித்தே - எந்தன் நேசரே சீறி மிக வெதிர்த்தே கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும் கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று - பின் 3. நெருக்கஞ் செய்தால் மனுஷர் - அதென்னை உன் நெஞ்சண்டை யோட்டுவதாம்; கருக்கான சோதனை கடினமாய் வதைத்தாலும் உருக்கமுள்ளோனே! உனை ஒருபோதுமே விடேன் - பின்
எவ்வண்ணமாக, கர்த்தரே 1. எவ்வண்ணமாக, கர்த்தரே, உம்மை வணங்குவேன்; தெய்வீக ஈவைப் பெறவே ஈடென்ன தருவேன்? 2. அநேக காணிக்கைகளால் உம் கோபம் மாறுமோ? நான் புண்ணிய கிரியை செய்வதால் கடாட்சம் வைப்பீரோ? 3. பலியின் ரத்தம் வெள்ளமாய் பாய்ந்தாலும், பாவத்தை நிவிர்த்தி செய்து சுத்தமாய் ரட்சிக்கமாட்டாதே. 4. நான் குற்றவாளி, ஆகையால் என்பேரில் கோபமே நிலைத்திருந்து சாபத்தால் அழிதல் நியாயமே. 5. ஆனால் என் பாவம் சுமந்து ரட்சகர் மரித்தார்; சாபத்தால் தலை குனிந்து தம் ஆவியை விட்டார். 6. இப்போதும் பரலோகத்தில் வேண்டுதல் செய்கிறார் உம் திவ்விய சந்நிதானத்தில் என்னை நினைக்கிறார் 7. இவ்வண்ணமாக, கர்த்தரே, உம்மை வணங்குவேன். என் நீதி இயேசுகிறிஸ்துவே, அவரைப் பற்றினேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள், Chapter 10 9. மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம் மணிநேரத்தில் ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான். 10. அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து, 11. வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், 12. அதிலே பூமியிலுள்ள சலவிதமான நாலுகால் ஜீவன்களும் விருட்சங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும், கண்டான். 13. அல்லாமலும் பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. 14. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். 15. அப்பொழுது தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. 16. மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தானியேல், Chapter 1 1. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான். 2. அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான். 3. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும், 4. அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான். 5. ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான். 6. அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். 7. பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். 8. தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். 9. தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார். 10. பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான். 11. அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி: 12. பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, 13. எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான். 14. அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான். 15. பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது. 16. ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான். 17. இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். 18. அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான். 19. ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். 20. ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். 21. கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.
கர்த்தரின் பந்தியில் வா சகோதார கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின் திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோ உனக்காய்ப் பகிரப்பட்டதல்லோ தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு ராப்போஜன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன் ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே இருதயம் சுத்த திடனாமே இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிருப்போதே வா
மாற்கு, Chapter 14 12. பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். 13. அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள். 14. அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ, அந்த வீட்டு எஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். 15. அவன் கம்பளம் முதலானவைகளை விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 16. அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். 17. சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார். 18. அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19. அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ, நானோ? என்று ஒவ்வொருவரும் அவரிடத்தில் கேட்கத்தொடங்கினார்கள். 20. அவர் பிரதியுத்தரமாக: என்னுடனே கூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி; 21. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். 22. அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 23. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். 24. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. 25. நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 26. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.
சங்கீதம், Chapter 104 14. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி அவர் மிருகங்களுக்குப் புல்லையும் மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 15. மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். 16. கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும். 17. அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு. 18. உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும் கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம். 19. சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும். 20. நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும். 21. பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும். 22. சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும். 23. அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன்பண்ணைக்கும் புறப்படுகிறான். 24. கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. 25. பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு. 26. அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. 27. ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். 28. நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். 29. நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும். 30. நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
C.S.I Home Church Nagercoil - 23 August 2020 - ஞாயிறு காலை ஆராதனை | 8.00 am Sunday Service. #CSIHomechurchNagercoil #homechurchNagercoil #Nagercoilhomechurch #live #sundayservice
12th Sunday after Pentecost, "திருவிருந்து எனும் திருவருட்சாதனம்" "The Sacrament of Holy Communion" ஞானப்பாடல் 369 விருந்தை சேருமேன் அழைக்கிறார் சங்கீதம் / Psalms 104:14-30 ஆதியாகமம் / Genesis 14: 17-24 I கொரிந்தியர் / 1 Corinithians 10:15-17 மாற்கு / Mark 14:12-26 கீர்த்தனை 433 கர்த்தரின் பந்தியில் வா COLLECT: God Most High, Possessor of Heaven and Earth, Who gave Your Son to be poured out as a ransom for many, help us to realize that we cannot partake of the table of the Lord and also the table of the evil one. The cup of blessing would indeed be a participation in the blood of Christ. Through Jesus Christ and the broken bread, a participation in the body of Christ who lives and reigns with You and the Holy Spirit, One God, now and forever more. Amen
1. யோர்தான் விட்டேறி, மனுஷ குமாரன் ஜெபித்தார்; வானின்றப் போதிறங்கின புறா உருக் கண்டார். 2. நல்லாவி அபிஷேகமாய் அவர் மேல் தங்கினார்; என் நேச மைந்தன் என்பதாய் பிதா விளம்பினார். 3. அவ்வாறு ஸ்நானத்தால் புது பிறப்பை அடைந்தார், மெய்த் தெய்வ புத்திரர் என்று விஸ்வாசத்தால் காண்பார். 4. கபடில்லாப் புறாத்தன்மை தரிக்கப்படுவார் நல்லாவித் தங்கள் உள்ளத்தை நடத்தப் பெறுவார். 5. உம் ரத்த ஊற்றால் பாவத்தை நீக்கின கிறிஸ்துவே, தூய்மையோரான தாசரை தற்காத்துக் கொள்ளுமே. 6. சீர் கெட்டலோகம் மீட்டோரே, பிதா ஆவியையும் உம்மோடு ஏகராகவே என்றென்றும் துதிப்போம்
பாவியாகவே வாரேன்; பாவம் போக்கும் பலியாம் என் யேசுவே, வாரேன் 1. பாவக்கறை போமோ என் பாடாய் ? உன் பாட்டலன்றிப் போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் 2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே; தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் 3. பேய் மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப் போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் 4. ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன், தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் 5. துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர் இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான்!
யோவான், Chapter 3 1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2. அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்மாட்டான் என்றான். 3. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 4. அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். 5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 6. மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7. நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8. காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
தீத்து, Chapter 3 3. ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். 4. நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, 5. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். 6. தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக, 7. அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். 8. இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
யாத்திராகமம், Chapter 14 14. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். 15. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. 16. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள். 17. எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். 18. இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார். 19. அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. 20. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. 21. மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. 22. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. 23. அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். 24. கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து, 25. அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள். 26. கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார். 27. அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார். 28. ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. 29. இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. 30. இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள். 31. கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.
சங்கீதம், Chapter 32 1. எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான். 2. எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். 3. நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 4. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.) 5. நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.(சேலா.) 6. இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது. 7. நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.) 8. நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 9. வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். 10. துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். 11. நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.
1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்! 2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும், அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்! 3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே 4. லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும் சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க? 5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும் முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார் 6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும் மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்
மத்தேயு, Chapter 19 3. அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரதினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். 4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், 5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? 6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
எபிரெயா;, Chapter 13 1. சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. 2. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. 3. கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். 4. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். 5. நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. 6. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.
1. பிதாவே மெய் விவாகத்தை கற்பித்துக் காத்து வந்தீர் நீர் அதினாலே மாந்தரை இணைத்து வாழ்வைத் தந்தீர்; அதற்கெப்போதும் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர் தாமே வரப்பண்ணும். 2. நன்னாளிலும் துன்னாளிலும் மனம் பொருந்தச் செய்யும்; இவர்கள் இருபேரையும் அன்பில் நிலைக்கப்பண்ணும்; உம்மை முன்னிட்டு ஏதெதை செய்வார்களோ; நீரே அதை நன்றாக வாய்க்கப்பண்ணும். 3. ஆ! ஜீவ ஊற்றாம் யேசுவே, நீர் ஜீவன் ஈகிறீரே; ஆத்துமத்தையும் நித்தமே நீர் தேற்றி நிற்கிறீரே; ஆ! ஞான மணவாளனே, என்றைக்கும் அடியாருக்கே குறைச்சல் ஒன்றும் இல்லை.
சங்கீதம், Chapter 128 1. கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். 2. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். 3. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 4. இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான். 5. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். 6. நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
ஆதியாகமம், Chapter 2 18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். 19. தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. 20. அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. 21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். 22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். 23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். 24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 25. ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
Feeling blessed by this sermon 🙏🙏🙏
Feeling blessed by this sermon.🙏🙏🙏
நினையேன், மனம், நினையேன் தினம் உனை மீட்ட யேசுவையே. அனுபல்லவி கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை.- நினை சரணங்கள் 1. கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப், புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து, தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர்[1] கதியை. - நினை 2. நரக அழலாலே[2] கெடு நாசம் வந்த காலே உருகி, மனம் இரங்கித், தொலைத் துண்மையுடன் இணங்கி, பரமனோடு உறவாக்கி, மெய்ப்பலனும் பெறத் தாக்கி, பெருக நலம்புரிந்தோன், மறை பேதம் இன்றி அறைந் தோன். - நினை 3. ஜெயமும், புத்ர சுவிகாரமும், சிறந்த நீதியும், மகா நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும் சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும் பயன் ஏலவே, தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே. - நினை
மத்தேயு, Chapter 18 21. அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். 22. அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். 23. எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 24. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள். 25. கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விட்டு, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். 26. அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். 27. அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். 28. அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நு}று வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். 29. அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். 30. அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். 31. நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். 32. அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33. நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34. அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35. நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
மத்தேயு 18 : 21 - 35 www.dailymanna.co.in/ta/mt/18 21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். 22 அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். 23 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 24 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள். 25 கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். 26 அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். 27 அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். 28 அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். 29 அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். 30 அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். 31 நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். 32 அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35 நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
Matthew 18 : 21 - 35 www.dailymanna.co.in/kjv/mt/18 21 Then came Peter to him, and said, Lord, how oft shall my brother sin against me, and I forgive him? till seven times? 22 Jesus saith unto him, I say not unto thee, Until seven times: but, Until seventy times seven. 23 Therefore is the kingdom of heaven likened unto a certain king, which would take account of his servants. 24 And when he had begun to reckon, one was brought unto him, which owed him ten thousand talents. 25 But forasmuch as he had not to pay, his lord commanded him to be sold, and his wife, and children, and all that he had, and payment to be made. 26 The servant therefore fell down, and worshipped him, saying, Lord, have patience with me, and I will pay thee all. 27 Then the lord of that servant was moved with compassion, and loosed him, and forgave him the debt. 28 But the same servant went out, and found one of his fellowservants, which owed him an hundred pence: and he laid hands on him, and took him by the throat, saying, Pay me that thou owest. 29 And his fellowservant fell down at his feet, and besought him, saying, Have patience with me, and I will pay thee all. 30 And he would not: but went and cast him into prison, till he should pay the debt. 31 So when his fellowservants saw what was done, they were very sorry, and came and told unto their lord all that was done. 32 Then his lord, after that he had called him, said unto him, O thou wicked servant, I forgave thee all that debt, because thou desiredst me: 33 Shouldest not thou also have had compassion on thy fellowservant, even as I had pity on thee? 34 And his lord was wroth, and delivered him to the tormentors, till he should pay all that was due unto him. 35 So likewise shall my heavenly Father do also unto you, if ye from your hearts forgive not every one his brother their trespasses.
யூபிலி ஆண்டு வந்தது 1. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள் சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள் சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது 2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம் அவரே யாவர்க்கும் இரட்சகர் என்னுங்கள் சிறைப்பட்டோரின் மீட்புக்கு ய10பிலி ஆண்டு வந்தது 3. மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது 4. பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே உங்களை இரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது 5. சந்தே செய்தியை எல்லாரும் கேளுங்கள் அன்போடு இயேசுவை இப்போதே சேருங்கள் சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
9th Sunday after Pentecost Mission Sunday அருட்பணி: அனைவருக்கும் நற்செய்தி (Mission: Good News to All) ஞானப்பாடல் 351 - கர்த்தாவின் தாசரே சங்கீதம் 146 www.dailymanna.co.in/ta/ps/146 Psalm 146 www.dailymanna.co.in/kjv/ps/146 ஏசாயா 55 : 1 - 6 www.dailymanna.co.in/ta/is/55 Isaiah 55 : 1 - 6 www.dailymanna.co.in/kjv/is/55 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34 - 43 www.dailymanna.co.in/ta/acts/10 Acts 10 : 34 - 43 www.dailymanna.co.in/kjv/acts/10 மத்தேயு 4 : 17 - 25 www.dailymanna.co.in/ta/mt/4 Matthew 4 : 17 - 25 www.dailymanna.co.in/kjv/mt/4 கீர்த்தனை 408 - சோபன கீதம் பாடுவோம் Collect: God of the Good News, Who made the heavens and the earth to communicate the Good News to the whole creation, Help us to incline our hearts to Your enlivening Word that ensure justice to the poor, food to the hungry, freedom to the bound, vision to the blind, protection to the stranger and dignity to the widow, So that we may imbibe the spirit of the good news, preach peace in Christ and live the gospel, In the name of God who chose us as witnesses, Christ who commanded us to preach and the Holy Spirit who enable us to testify. Amen.
சங்கீதம் 146 www.dailymanna.co.in/ta/ps/146 Psalm 146 www.dailymanna.co.in/kjv/ps/146 1 அல்லேலூயா, என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி. 2 நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன். 3 பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள். 4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். 5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 6 அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். 7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். 8 குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். 9 பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். 10 கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.
ஏசாயா 55 : 1 - 6 www.dailymanna.co.in/ta/is/55 Isaiah 55 : 1 - 6 www.dailymanna.co.in/kjv/is/55 1 ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்கொள்ளுங்கள். 2 நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். 3 உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். 4 இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும் அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். 5 இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைபடுத்தியிருக்கிறார். 6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34 - 43 www.dailymanna.co.in/ta/acts/10 Acts 10 : 34 - 43 www.dailymanna.co.in/kjv/acts/10 34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், 35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். 36 எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. 37 யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே. 38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். 39 யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிலும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். 40 மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படிசெய்தார். 41 ஆயினும் எல்லா ஜாதிகளுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார். 42 அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
மத்தேயு 4 : 17 - 25 www.dailymanna.co.in/ta/mt/4 Matthew 4 : 17 - 25 www.dailymanna.co.in/kjv/mt/4 17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். 18 இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: 19 என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 20 உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள். 21 அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். 22 உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள். 23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். 24 அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார். 25 கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
பிலிப்பியர் 4 : 11 - 23 www.dailymanna.co.in/ta/php/4 11 என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். 12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். 13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. 14 ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது. 15 மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 16 நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள். 17 உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். 18 எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். 19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். 20 நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். 21 கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 22 பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 23 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Philippians 4 : 11 - 23 www.dailymanna.co.in/kjv/php/4 11 Not that I speak in respect of want: for I have learned, in whatsoever state I am, therewith to be content. 12 I know both how to be abased, and I know how to abound: every where and in all things I am instructed both to be full and to be hungry, both to abound and to suffer need. 13 I can do all things through Christ which strengtheneth me. 14 Notwithstanding ye have well done, that ye did communicate with my affliction. 15 Now ye Philippians know also, that in the beginning of the gospel, when I departed from Macedonia, no church communicated with me as concerning giving and receiving, but ye only. 16 For even in Thessalonica ye sent once and again unto my necessity. 17 Not because I desire a gift: but I desire fruit that may abound to your account. 18 But I have all, and abound: I am full, having received of Epaphroditus the things which were sent from you, an odour of a sweet smell, a sacrifice acceptable, wellpleasing to God. 19 But my God shall supply all your need according to his riches in glory by Christ Jesus. 20 Now unto God and our Father be glory for ever and ever. Amen. 21 Salute every saint in Christ Jesus. The brethren which are with me greet you. 22 All the saints salute you, chiefly they that are of Caesar's household. 23 The grace of our Lord Jesus Christ be with you all. Amen.
ஆதியாகமம் 28 : 10 - 22 www.dailymanna.co.in/ta/gn/28 10 யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, 11 ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். 12 அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். 13 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 14 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 15 நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். 16 யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். 17 அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். 18 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, 19 அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. 20 அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, 21 என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; 22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
Genesis 28 : 10 - 22 www.dailymanna.co.in/kjv/gn/28 10 And Jacob went out from Beersheba, and went toward Haran. 11 And he lighted upon a certain place, and tarried there all night, because the sun was set; and he took of the stones of that place, and put them for his pillows, and lay down in that place to sleep. 12 And he dreamed, and behold a ladder set up on the earth, and the top of it reached to heaven: and behold the angels of God ascending and descending on it. 13 And, behold, the LORD stood above it, and said, I am the LORD God of Abraham thy father, and the God of Isaac: the land whereon thou liest, to thee will I give it, and to thy seed; 14 And thy seed shall be as the dust of the earth, and thou shalt spread abroad to the west, and to the east, and to the north, and to the south: and in thee and in thy seed shall all the families of the earth be blessed. 15 And, behold, I am with thee, and will keep thee in all places whither thou goest, and will bring thee again into this land; for I will not leave thee, until I have done that which I have spoken to thee of. 16 And Jacob awaked out of his sleep, and he said, Surely the LORD is in this place; and I knew it not. 17 And he was afraid, and said, How dreadful is this place! this is none other but the house of God, and this is the gate of heaven. 18 And Jacob rose up early in the morning, and took the stone that he had put for his pillows, and set it up for a pillar, and poured oil upon the top of it. 19 And he called the name of that place Bethel: but the name of that city was called Luz at the first. 20 And Jacob vowed a vow, saying, If God will be with me, and will keep me in this way that I go, and will give me bread to eat, and raiment to put on, 21 So that I come again to my father's house in peace; then shall the LORD be my God: 22 And this stone, which I have set for a pillar, shall be God's house: and of all that thou shalt give me I will surely give the tenth unto thee.
8th Sunday after Pentecost அருட்பொழிவு திருப்பணி: மாற்றுருவாக்கம் பெற்றது மாற்றுருவாக்கம் செய்வதற்கே Ordained ministry: Transformed to Transform ஞானப்பாடல் 352 - அபிஷேகம் பெற்ற சீஷர் சங்கீதம் / Psalm 99 : 1 - 9 எசேக்கியேல் / Ezekiel 33 : 1 - 9 1 தீமோத்தேயு / 1 Timothy 3 : 1 - 13 யோவான் / John 21 : 15 - 19 கீர்த்தனை 353 - மாற்றீர் என் கவலை Collect: O Chief Shepherd , Who constantly call the people of God to tend and feed the little lambs and the sheep. Raise among us Your children who are above reproach, who would be sentinels for Your people, So that in and through them the world would experience the transformation in Christ, Through Jesus Christ, who lives and reigns with You and the Holy Spirit, One God, now and forever more. Amen.
சங்கீதம் 99 : 1 - 9 www.dailymanna.co.in/ta/ps/99 Psalm 99 : 1 - 9 www.dailymanna.co.in/kjv/ps/99 1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார். பூமி அசைவதாக. 2 கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர். 3 மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது. 4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். 5 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர். 6 அவருடைய ஆசாரியரில் மோசேயும், ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார். 7 மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். 8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர். 9 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.
எசேக்கியேல் 33 : 1 - 9 www.dailymanna.co.in/ta/eze/33 Ezekiel 33 : 1 - 9 www.dailymanna.co.in/kjv/eze/33 1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு, 3 இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது, 4 எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும். 5 அவன் எக்காளத்தின் சத்தத்தைக்கேட்டும், எச்சரிக்கையாயிருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன்பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான். 6 காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன். 7 மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. 8 நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன். 9 துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.