Thilees Singarajah
Thilees Singarajah
  • 272
  • 275 012
🔴யாழில் நடந்த உண்மைச் சம்பவம்❤️‍🔥முருகனுக்கு 𝟳𝟱𝟬𝟬 இளநீர் கொடுத்த வேற்று மத இளைஞர்கள்.! காரணம் என்ன?
காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீதியை அலங்கரித்த தண்ணீர் பந்தல்களுக்கு நடுவில் இலவச இளநீர் பந்தல் ஒன்று.. புன்னகையே அடையாளமாக தன் நண்பனோடு இணைந்து 7500 செவ் இளநீரை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார் அண்ணன் ஜெயக்கொடி.. உழைப்பால் உயர்ந்த ஓர் மனிதன்..
இன்றய சூழ்நிலையில் ஒவ்வொரு மதங்கள் சார்ந்த சமயப் பெரியோர்களும் ஆதீன முதல்வர்களும் பல பிணக்குகளோடு நீதி மன்றங்களில் வழக்குகள் வைத்து காத்திருக்கும் வேளையில் மதங்கள் வேறாக இருந்தாலும் மனங்களால் இணைந்து மதங்களைக்கடந்தும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த நற்செயலும் ஓர் எடுத்துக்காட்டு என்றே சொல்லத் தோன்றுகிறது...
உறவுகளுக்கு வணக்கம் இது இலக்கியா events திலீஸ் சிங்கராஜா youtube தளம்..
இந்த காணொளி யாழ்ப்பாணத்தில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் முருகன் ஆலய திருவிழாவுக்கு ஆதரவாக பக்தர்கள் தாகம் தீர்க்கும் இலவச இளநீர் பந்தல் அமைத்த விடயத்தையும் யார் இந்த மனிதன் என்ற விபரத்தையும் வழங்கும் ஓர் காணொளி...
இந்த காணொளியை பார்க்கும் நீங்கள் எமது CHANNEL ற்கு புதியவர் என்றால் இந்த காணொளிக்கு LIKE செய்து ஆதரவு தாருங்கள்.. தொடர்ச்சியான எங்கள் காணொளிகளைப் பார்க்க SUBSCRIBE செய்து வைத்துக்கொள்ளுங்கள்..
காணொளிக்குள் செல்வோம்...
Jenifer fruits என்று ஆரம்பித்த வியாபாரம்..
இன்று பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சிறப்பே இவர்களின் உழைப்புக்கும் அயராத முயற்சிக்கும் எடுத்துக் காட்டு எனலாம்..
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பழவகைகளை வடமாகாணத்திற்கு அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவது அதுபோல இங்கிருந்து திராட்சைப் பழங்கள் உட்பட அனைத்து பழ வகைகளையும் கொண்டு செல்வது என இந்த jenifer fruits என்ற வணிக வியாபாரத்தின் கிளைகள் பல பரந்திருப்பதும் பலர் அறிந்த விடயம்..
இவருடைய தம்பிகளான சுமன் மற்றும் தர்சா இருவரோடு உற்ற நண்பனான சசி ஆகியோர் இணைந்த தொழில் முயற்சியே இந்த jenifer fruits.. இதனூடாக முன்னேறி இன்று நாம் நன்றாக இருக்கின்றோம்.. உழைப்பை நம்பு கடவுளை மறவாதே என்று ஆறுமுகநாவலர் கூறி இருப்பதைப் போல இறைபக்தி உள்ள அதே வேளை தன் உழைப்பின் மீது நம்பிக்கை அதிகம் கொண்ட ஜெயக்கொடிஅண்ணா புன்னகையோடு சில வார்த்தைகள் சொல்கிறார் கேளுங்கள்...
இந்த இலவச இளநீர் பந்தல் எங்கே அமைத்திருந்தார் என்பதை சரியாக சொல்வதென்றால் kks வீதியில் யாழ்ப்பாணம் வரும் வழியில் நாச்சிமார் கோவில் கடந்து பயணிக்கும் சில மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது SSY அன்னாசிக் கடை.. தரமான சுவையான பழ வகைகளை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள கூடிய ஓர் இடம் SSY அன்னாசிக் கடை என்பது கங்கேசன்துறை வீதியில் பயணிப்போர் அறிந்த விடயம்..
எப்பொழுதாவது இந்த இடத்திற்கு வந்தால் நல்ல தரமான பழ வகைகளை நீங்களும் இங்கே கொள்வனவு செய்யலாம்.. இந்த SSY அன்னாசிக் கடைக்கு அருகில் அமைக்கப்பட்ட பிரத்தியேகப் பந்தலில் இளைஞர்கள் பலர் நின்று ஓய்வின்றி இளநீர் வெட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க ஆலயத்திற்கு சென்ற அடியவர்கள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மக்கள் என அனைவரும் ஒன்று இரண்டு என்றில்லாமல் தம் தாகம் தீர 3,4 இளநீர் எனவும் வாங்கி அருந்தினார்கள்..
பந்தல் நிறைய இளநீர் பறிக்கப் பட்டிருக்கிறது.. அதே நேரம் இளநீர் கோம்பைகள் தனியாக ஓரிடத்தில் சேர்க்கப் பட்டுக்கொண்டிருந்தது.. இந்த நிகழ்வு முடிந்த மறுநாள் இந்த இடத்தில் இவை இருந்த தடமே தெரியாதவாறு வெற்றுக் கோம்பைகள் அப்புறப்படுத்த பட்டு சுத்தம் செய்யப் பட்டிருந்தமை இந்த ஏற்பாடு பற்றிய கூடுதல் தகவல் எனலாம்.
கடந்த வருடம் அதாவது 2023 ல் 6000 இளநீர் இலவசமாக வழங்கி இருந்தார்.. இந்த வருடம் 7500 இளநீர் வருகிற வருடம் அதாவது 2025 ல் இன்னும் அதிகமாக வழங்குவேன் என்று அண்ணன் கூறுகிறார்.. .
இன்று ஒவ்வொரு மதங்கள் சார்ந்த சமயப் பெரியோர்களும் ஆதீன முதல்வர்களும் பல பிணக்குகளோடு நீதி மன்றங்களில் வழக்குகள் வைத்து காத்திருக்கும் வேளையில் மதங்கள் வேறாக இருந்தாலும் மனங்களால் இணைந்து மதங்களைக்கடந்து வாழும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த நற்செயலும் ஓர் எடுத்துக்காட்டு என்றே சொல்லத் தோன்றுகிறது...
இந்த நற்செயலை வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயக்கொடி அண்ணன் மற்றும் அவரோடு இணைந்த அவருடைய நண்பரான சசி தம்பிகளான சுமன் மற்றும் தர்சா அதே போல இன்றைய நாளில் இங்கிருந்து இளநீர் வெட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் பக்க துணையாக இருக்கும் இவருடைய நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் கூறுகின்ற அதே நேரம் இவர்களின் நற்பணிகள் மென்மேலும் நிகழவும் தொழில் முயற்சிகள் இன்னும் அதிகமாக வளரவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.. நீங்களும் வாழ்த்துங்கள் உறவுகளே...
காணொளிகள் சில அழிந்து போனதால் தவற விடப் பட்ட ஓர் நற்செயல் இது..
கடந்த வருடம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேர்த் திருவிழா நேரம் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீதியில நல்லூர் திருவிழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் பந்தல்கள் மற்றும் ஆலய புறச் சூழலின் அழகியல் எனப் பல விடயங்களை காணொளிகளாக நாம் பதிவேற்றி இருந்தோம்..
அந்தக் காணொளிகளில் தவற விடப்பட்ட ஓர் நற்செயல் தான் இந்தக் காணொளி.. இந்த காணொளியை பார்க்கும் நீங்கள் எமது CHANNEL ற்கு புதியவர் என்றால் இந்த காணொளிக்கு LIKE செய்து ஆதரவு தாருங்கள்.. தொடர்ச்சியான எங்கள் காணொளிகளைப் பார்க்க SUBSCRIBE செய்து வைத்துக்கொள்ளுங்கள்..
Переглядів: 3 939

Відео

🔴தம்பி உடையான் படைக்கு அஞ்சான் | அண்ணனின் பிறந்தநாளில் தம்பியின் Surprise. #ilakkiya #events #tamil
Переглядів 49514 днів тому
🔴தம்பி உடையான் படைக்கு அஞ்சான் | அண்ணனின் பிறந்தநாளில் தம்பியின் Surprise. #ilakkiya #events #tamil
உறவுகள் முன் காதலி அனுப்பிய surprise Gift.. திணறிய காதலன்
Переглядів 29 тис.14 днів тому
உறவுகள் முன் காதலி அனுப்பிய surprise Gift.. திணறிய காதலன்
மனதைக் கவரும் அழகியல் | கடந்து செல்ல மனம் வரவில்லை.. நீங்களும் பாருங்கள்.. #ilakkiya #nature #beauty
Переглядів 1,2 тис.21 день тому
மனதைக் கவரும் அழகியல் | கடந்து செல்ல மனம் வரவில்லை.. நீங்களும் பாருங்கள்.. #ilakkiya #nature #beauty
🔴ஒரு கசப்பான உண்மை.? சமூக வலை எனும் சமூகப் பிறழ்வு முற்றம்.! Thilees Singarajah
Переглядів 31021 день тому
🔴ஒரு கசப்பான உண்மை.? சமூக வலை எனும் சமூகப் பிறழ்வு முற்றம்.! Thilees Singarajah
🔴மகிழ்ச்சியான முதியோர் விருந்தினர் இல்லம் - திறப்பு விழாவில் பெயர் சொன்னவருக்கும் பண்ணப்பரிசு#jaffna
Переглядів 28521 день тому
🔴மகிழ்ச்சியான முதியோர் விருந்தினர் இல்லம் - திறப்பு விழாவில் பெயர் சொன்னவருக்கும் பண்ணப்பரிசு#jaffna
🔴எந்த அப்பாக்களுக்கும் இப்பிடி ஒரு நிலை வரக்கூடாது❤️🥺ஆனால் மகள் பிறந்தால் வந்தே தீரும்.. #ilakkiya 👊
Переглядів 80821 день тому
🔴எந்த அப்பாக்களுக்கும் இப்பிடி ஒரு நிலை வரக்கூடாது❤️🥺ஆனால் மகள் பிறந்தால் வந்தே தீரும்.. #ilakkiya 👊
நம்பிக்கை வீண் போகவில்லை | இன்னும் நிறைய இருக்கு 🎁| Known Love ❤️
Переглядів 283Місяць тому
நம்பிக்கை வீண் போகவில்லை | இன்னும் நிறைய இருக்கு 🎁| Known Love ❤️
🔴 முயற்சி உள்ளவர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடுகள் 🔴 வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் 🔴 தல 60 அதிரடி
Переглядів 395Місяць тому
🔴 முயற்சி உள்ளவர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடுகள் 🔴 வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் 🔴 தல 60 அதிரடி
பூவாரம் கட்டி பூந்தொட்டில் இட்டு கொண்டாடி மகிழ வந்த குலமகளே என்று வாழ்த்துக்களோடு வந்த அன்புப் பரிசு
Переглядів 633Місяць тому
பூவாரம் கட்டி பூந்தொட்டில் இட்டு கொண்டாடி மகிழ வந்த குலமகளே என்று வாழ்த்துக்களோடு வந்த அன்புப் பரிசு
விற்பனைக்கு வந்திருக்கு அச்சுவேலி நகரப் பகுதியில்
Переглядів 31Місяць тому
விற்பனைக்கு வந்திருக்கு அச்சுவேலி நகரப் பகுதியில்
🤭தஸ்வி குழப்படி எண்டு சிரிப்பே காட்டிக் கொடுக்குது 😆சித்தா + அன்ரா 🎁 அன்புப் பரிசு #ilakkiya #events
Переглядів 121Місяць тому
🤭தஸ்வி குழப்படி எண்டு சிரிப்பே காட்டிக் கொடுக்குது 😆சித்தா அன்ரா 🎁 அன்புப் பரிசு #ilakkiya #events
🔴இதுவா சேவை.? பாவம் ஏழைகள்.!🤭 புண்ணியம்.? கர்மா விடாது.! Big Scam.!🔴
Переглядів 3,1 тис.Місяць тому
🔴இதுவா சேவை.? பாவம் ஏழைகள்.!🤭 புண்ணியம்.? கர்மா விடாது.! Big Scam.!🔴
பிரியாணியும் பிறந்தநாள் வாழ்த்தும் | அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..
Переглядів 102Місяць тому
பிரியாணியும் பிறந்தநாள் வாழ்த்தும் | அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..
பேரலைகளின் காட்சிகள் | 2024 December | #disaster #srilanka #jaffna
Переглядів 740Місяць тому
பேரலைகளின் காட்சிகள் | 2024 December | #disaster #srilanka #jaffna
🔴நேரடிக் காட்சிகள் | ⚠️ மிகைப் படுத்த படாத நிலவரம் பற்றிய தகவல்கள்.. current situation..
Переглядів 10 тис.Місяць тому
🔴நேரடிக் காட்சிகள் | ⚠️ மிகைப் படுத்த படாத நிலவரம் பற்றிய தகவல்கள்.. current situation..
அன்பே பிரதானம் | கடல் கடந்து வந்த அன்புப் பரிசு.. #ilakkiya #events 0766243205
Переглядів 1,3 тис.2 місяці тому
அன்பே பிரதானம் | கடல் கடந்து வந்த அன்புப் பரிசு.. #ilakkiya #events 0766243205
தேடி வந்த குட்டிப் பிள்ளையார் + காசு | நன்றி சொல்ல மறுத்த மாப்பிள்ளை.!
Переглядів 7552 місяці тому
தேடி வந்த குட்டிப் பிள்ளையார் காசு | நன்றி சொல்ல மறுத்த மாப்பிள்ளை.!
இந்தத் தடை நீக்கும் ஒரே நபர் ஜனாதிபதி அவர்களே.! பேசுவார்களா நம் அரசியல்வாதிகள்.?
Переглядів 1,8 тис.2 місяці тому
இந்தத் தடை நீக்கும் ஒரே நபர் ஜனாதிபதி அவர்களே.! பேசுவார்களா நம் அரசியல்வாதிகள்.?
குடும்பப் பொறுப்புடன் உழைக்கும் தம்பிக்கு, உறவுகளின் அன்புப் பரிசு.🎁
Переглядів 5312 місяці тому
குடும்பப் பொறுப்புடன் உழைக்கும் தம்பிக்கு, உறவுகளின் அன்புப் பரிசு.🎁
உறவுகளோடு ஒன்றாக இங்கேயே வாழலாம்..| வெளிநாடு செல்ல விரும்பாத தங்கை..
Переглядів 1,1 тис.2 місяці тому
உறவுகளோடு ஒன்றாக இங்கேயே வாழலாம்..| வெளிநாடு செல்ல விரும்பாத தங்கை..
இது பிரியாணியா..? இறைச்சிச் சாப்பாடா.?
Переглядів 4033 місяці тому
இது பிரியாணியா..? இறைச்சிச் சாப்பாடா.?
எதிர்பார்க்காத பரிசு மழை..| அனுப்பியவர் யார் என்று சொல்ல தயங்கிய அப்பா..
Переглядів 2954 місяці тому
எதிர்பார்க்காத பரிசு மழை..| அனுப்பியவர் யார் என்று சொல்ல தயங்கிய அப்பா..
KKS BEACH க்கு போனால்...
Переглядів 2434 місяці тому
KKS BEACH க்கு போனால்...
500 பேருக்கு | காலை மாலை உணவு | பிறந்தநாள் சிறப்பு | #ilakkiya #events | 076 62 43 205
Переглядів 1934 місяці тому
500 பேருக்கு | காலை மாலை உணவு | பிறந்தநாள் சிறப்பு | #ilakkiya #events | 076 62 43 205
UNBOXING - SAMSUNG GALAXY A15 5G #galaxya155g & BACK COVER STICKERING - TAMIL | IN JAFFNA PHONE SHOP
Переглядів 4354 місяці тому
UNBOXING - SAMSUNG GALAXY A15 5G #galaxya155g & BACK COVER STICKERING - TAMIL | IN JAFFNA PHONE SHOP
எனது முகவரிக்கு வந்த சுவிஸ் பார்சல் பெட்டி.. எதிர்பாராத பொருட்கள்.. 100Kg க்கு கூட வரும்..
Переглядів 2114 місяці тому
எனது முகவரிக்கு வந்த சுவிஸ் பார்சல் பெட்டி.. எதிர்பாராத பொருட்கள்.. 100Kg க்கு கூட வரும்..
கோழி இறைச்சியில இரண்டு கறி | Special விருந்து & சிறப்பு வாழ்த்துப் பாட்டு
Переглядів 5734 місяці тому
கோழி இறைச்சியில இரண்டு கறி | Special விருந்து & சிறப்பு வாழ்த்துப் பாட்டு
Medical Student Thileepan ( Partheepan )
Переглядів 124 місяці тому
Medical Student Thileepan ( Partheepan )
Rebekka அக்கா கொடுத்த Dressing Table.! மயூரன் குடும்பம் கொடுத்த twist Surprise..!
Переглядів 834 місяці тому
Rebekka அக்கா கொடுத்த Dressing Table.! மயூரன் குடும்பம் கொடுத்த twist Surprise..!

КОМЕНТАРІ